போரில் ஈடுபட்டு, பின்னர் புனர்வாழ்வு பெற்று, சமூகமயப்படுத்தப்பட்ட இளைஞர்கள் பலர் தொழில்வாய்ப்;பின்றி முடங்கிக் கிடக்கின்றனர். இவர்கள் திறமையும், ஆற்றலும் கொண்டவர்கள். எனினும் இளம் வயதிலேயே, இடைநடுவில் கல்வியை நிறுத்திக்கொண்டதால், கல்வித்தகைமைகளை பெற்றுக்கொள்ளமுடியாத துரதிர்ஷ்;டம் இந்த இளைஞர்களுக்கு ஏற்பட்டுள்ளது. இவ்வாறானவர்கள்; தொழில்வாய்பை பெறுவதிலும் பல்வேறு நிறுவனங்களில் ஆக்கப் பயிற்சிகளை பெறுவதிலும் தடைகள் உள்ளன.
இவர்களின் விடயத்தில் யு.எஸ்.எய்ட் நிறுவனம் விஷேட கவனம் செலுத்தி ஆக்கபூர்வமான திட்டங்களை செயற்படுத்துவதற்கு உதவவேண்டுமென கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் கோரிக்கை விடுத்தார்.
கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீனுக்கும் யு.எஸ்.எய்ட் நிறுவனத்தின் இலங்கைக்கான பிரதித் தலைவர் எலிசபத் டெவினி எஸ்டட் அவர்களுக்குமிடையில் இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் போதே அவர் இந்த வேண்டுகோளை விடுத்தார்.
இந்தச் சந்திப்பின் போது,
லங்கா சதொச உட்பட கைத்தொழில் வர்த்தக அமைச்சின் கீழான நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களின் மனித வளநுட்பங்களை அதிகரிக்கும் வகையிலான திட்டங்களுக்கு சர்வதேச அபிவிருத்திக்கான அமெரிக்க இராச்சிய முகவரகம் (யு.எஸ்.எய்ட்) நிறுவனம் உதவியளிக்க முன்வந்தது.
தனியார் துறையினரின் நடவடிக்கைகளுக்கே தமது நிறுவனம் ஊக்கமளித்தும் உதவியளித்தும் வருவதாக தெரிவித்த யு.எஸ்.எய்ட் நிறுவனத்தின் இலங்கைக்கான பிரதித் தலைவர், தனியார் துறையினரின் வளர்ச்சி மற்றும் தனியார் சந்தைகளின் ஊக்குவிப்பு தொடர்பில் அந்தத் துறையுடன் சம்பந்தப்பட்டவர்களுக்கு மனிதவளப் பயிற்சியையும், நுட்ப திறனையும்; தமது நிறுவனம் வழங்கிவருவதாக பிரதித் தலைவர் எலிசபத் டெவினி எஸ்டட் குறிப்பிட்டார்.
இலங்கையில் யாழ்ப்பாணம், கண்டி, காலி ஆகிய இடங்களில் இத்துறை சார்ந்த பயிற்சி நிலையங்களை ஆரம்பிக்கவுள்ளதாகவும், நேரடியாக இந்தப் பயிற்சிகளை தாங்கள் வழங்குவதில்லையெனவும் குறிப்பிட்டார்.
பயிற்சியாளர்களைப் பயிற்றுவிக்கும் போதனாசிரியர்களுக்கு, இத்துறையில் தேர்ச்சிபெற்ற நிபுணர்கள் மூலம் இது தொடர்பிலான பயிற்சியை தாங்கள் வழங்குவதாகவும், இவ்வாறான பயிற்சியைப்பெற்றவர்களே, நேரடியாக பயிற்சி பெற வருவோர்களுக்கு, நுட்ப அறிவுகளை வழங்குவதாகவும் குறிப்பிட்டார். அத்துடன் நிறுவனங்களின் இயல்தகவை கட்டியெழுப்புவதும், தொழில் முயற்சியாண்மையாளர்களை ஊக்குவிப்பதும் தமது நிறுவனத்தின் மேலதிகமான பணியாகும் எனவும் குறிப்பிட்டார்.
இந்தச் சந்திப்பின் போது கருத்து தெரிவித்த அமைச்சர் ரிஷாட் பதியுதீன் 2005ம் தொடக்கம் கைத்தொழில் வர்த்தக அமைச்சு யு.எஸ். எய்ட் நிறுவனத்துடன் இணைந்து பல்வேறுபட்ட செயற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றது. யுஎஸ்.எய்ட் தற்போது மேற்கொண்டுவரும் உதவிகளுக்கு நன்றிகளை தெரிவிக்கின்றேன்.
லங்கா சதொசா நிறுவனம் இலங்கையின் வர்த்தச் சந்தையில்;; தனியார் துறையினருக்கு ஈடுகொடுக்கக்கூடிய வகையில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. தற்போது சுமார் 3200 ஊழியர்கள் நாடாளாவிய ரீதியில் இந்த நிறுவனத்தில் பணியாற்றுகின்றனர். இந்தவருட முடிவுக்குள் லங்கா சதொச நிறுவனத்தின் கிளைகளை 500ஆக அதிகரிக்கவுள்ளோம். அதன் மூலம் ஊழியர்களின் எண்ணிக்கையும் சுமார் 5ஆயிரமாக அதிகரிக்கும் வாய்ப்பு ஏற்படும்.
நுகர்வோருடன் நேரடியாக தொடர்புகளை கொண்டுள்ள லங்கா சதொச நிறுவனம் தமது ஊழியர்களின் நுட்பத்திறனையும் இயல்தகவையும் அதிகரிப்பதற்காக நடைமுறைப்படுத்தவுள்ள திட்டங்களுக்கு யு.எஸ்.எய்ட் நிறுவனத்தின் நேரடி உதவிகளையும், ஒத்துழைப்புக்களையும் வேண்டிநிற்கின்றது என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
யுத்தச்சீரழிவிலிருந்து விடுபட்டு, சமாதானத்தை கட்டியெழுப்ப பாடுபட்டுகொண்டிருக்கும் இந்த நாட்டில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்டவர்கள் தமது வாழ்வாதாரத்தை கட்டியெழுப்ப யு.எஸ்.எய்ட் நிறுவனம் கடந்த காலங்களில் உதவியளித்ததுபோன்று மேலும் உதவவேண்டுமென அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.
