ஜனாதிபதி ஆணைக்குழுவில் ரவி கருணாநாயக்க ஆஜர்..!

த்திய வங்கியின் பிணைமுறி மோசடி தொடர்பில் விசாரணை நடத்துவதற்காக ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட ஆணைக்குழுவிடம் வாக்குமூலம் வழங்க வெளிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்க சற்றுமுன்னர் ஆஜரானார்.

ரவி கருணாநாயக்க வசித்ததாகக் கூறப்படும் மொனார்க் ரெசிடன்சி வீட்டுத் தொகுதிக்கு வழங்கப்பட்ட வாடகைப்பணம், ரவி கருணாநாயக்க மற்றும் அர்ஜூன் அலோசியஸூக்கு இடையிலான தொடர்பு, மத்திய வங்கி விவகாரம் குறித்த கேள்விகளுக்கு ரவி கருணாநாயக்க இன்று பதிலளிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

வெளிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்க ஏற்கனவே இரண்டுமுறை சாட்சியமளிக்க முடியாது என ஜனாதிபதி ஆணைக்குழுவுக்குத் தெரியப்படுத்தியிருந்த நிலையில் இன்றையதினம் அவர் கட்டாயம் ஆஜராக வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -