க.கிஷாந்தன்-
தலவாக்கலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தலவாக்கலை பெரிய மல்லிகைப்பூ தோட்டத்தின் வழிப்பிள்ளையார் ஆலயத்தில் இரும்பு கம்பியால் பொருத்தப்பட்டிருந்த கதவு உடைக்கப்பட்டு உள்ளே இருந்த பிள்ளையார் சிலையை இனந்தெரியாதவர்கள் களவாடிச் சென்றுள்ளனர். 31.07.2017 அன்று அதிகாலை இச்சம்பவம் இடம்பெற்றிருக்கலாம் என விசாரணைகளை மேற்கொள்ளும் தலவாக்கலை பொலிஸார் தெரிவித்தனர்.
31.07.2017 அன்று காலை பிரதேவாசிகள் சிலை காணாமல் போனதையடுத்து கண்டு தலவாக்கலை பொலிஸாருக்கு முறைபாடு ஒன்றையும் பதிவு செய்துள்ளனர். அதனையடுத்து பொலிஸார் ஆலய கட்டிடத்திற்கு சென்று சோதனை நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.
அத்தோடு சம்பவம் தொடர்பில் இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை எனவும், பொலிஸார் தெரிவித்தனர். இச்சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணகைளை தலவாக்கலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். இவ் ஆலயத்தில் இது மூன்றாவது சம்பவமாக பதிவாகியுள்ளதோடு, இதற்கு முன்னர் இரண்டு தடவைகள் இவ்வாறு சிலையை களவாடிச் சென்றுள்ளமையும் குறிப்பிடதக்கது.