அமைச்சர் ரிஷாட்டின் வழிகாட்டலில் சர்வதேச தரத்துடன் டிப்ளோமா பாடநெறி..!

ஊடகப்பிரிவு-
ர்வதேச தரத்துடன் போட்டியிடும் வகையிலான டிப்ளோமா வடிவமைப்பு பாடநெறிகளை தேசிய வடிவமைப்பு நிலையம், இலங்கை தேசிய வடிவமைப்பு நிறுவனத்தின் மூலம் வழங்கிவருவதாகவும், இந்தப் பாடநெறியில் தேர்ச்சிபெற்றோர் வெளிநாடுகளிலும், உள்நாடுகளிலும் நல்ல சம்பளத்துடன் இலகுவான தொழில் வாய்ப்பை பெற வழி ஏற்பட்டுள்ளதாகவும், நிலையத்தின் தலைவர் சட்டத்தரணி மில்ஹான் லத்தீப் தெரிவித்தார்.

கைத்தொழில் வர்த்தக அமைச்சின் கீழான தேசிய வடிவமைப்பு நிலையத்தின் ஏற்பாட்டில் டிப்ளோமா மற்றும் உயர் தேசிய டிப்ளோமா பயிற்சிபெற்ற 96பேருக்கு விருது வழங்கும் நிகழ்வு இன்று காலை (30.08.30217) நடைபெற்ற போது தலைமையுரை ஆற்றிய போதே அவர் இவ்வாறு கூறினார். இந்த நிகழ்வில் கைத்தொழில் மற்றும் வர்த்தக இராஜாங்க அமைச்சர் சம்பிக்க பிரேமதாஸ, அமைச்சின் செயலாளர் சிந்தக்க எஸ் லொக்குஹெட்டி, ஏற்றுமதி அபிவிருத்திச் சபைத் தலைவர் இந்திரா மல்வத்த, தேசிய அருங்கலைகள் பேரவைத் தலைவர் ஹேசானி போகொல்லாகம ஆகியோர் உட்பட பலர் பங்கேற்றி இருந்தனர்.

நிலையத்தின் தலைவர் சட்டத்தரணி மில்ஹான் மேலும் கூறியதாவது,

கைத்தொழில் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் வழிகாட்டலிலும், ஆலோசனையிலுமே இந்த பாடநெறிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இந்த டிப்ளோமா பாடநெறியின் பிரதான இலக்கு, உள்ளக வடிவமைப்பில் பயிற்சியாளர்களை தேர்ச்சிபெறச் செய்வதே. உயர்தர தேசிய டிப்ளோமா (உள்ளக வடிவமைப்பு), ஒருவருட பாடநெறியை கொண்டது. தேசிய டிப்ளோமா (உள்ளக வடிவமைப்பு பாடநெறி) இரண்டு வருடகால பயிற்சி நெறியை கொண்டதாகும். இந்த பயிற்சி நெறிகளில் தளபாட வடிவமைப்பு மின்குமிழ் அலங்காரம் ஆகியவை முக்கியமாக கற்பிக்கப்படுகி;ன்றன. பல்கலைகழகத்தின் பேராசிரியர்கள், விரிவுரையாளர்களால் நடாத்தப்படும் இந்த விரிவுரைகளுக்கான பாடத்திட்டங்களை தேசிய வடிவமைப்பு நிலையேமே தயாரித்து வழங்குகின்றது.

அத்துடன் அரச துறையிலுள்ள ஒரேயொரு பயிற்சி நிலையமாக இந்த நிறுவனம் தொழிற்பட்டு வருகின்றது என்று அவர் தெரிவித்தார்.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -