எம்.ஜே.எம்.சஜீத்-
பல்கலைக் கழகங்களின் தொழில்நுட்ப உத்தியோகத்தர்கள் சங்கத்தின் தென்கிழக்குப் பல்கலைக்கழக செயலாளராக தொழில்நுட்ப உத்தியோகத்தர் சலீம் றமீஸ் தெரிவு!
இலங்கை பல்கலைக் கழகங்களின் தொழில்நுட்ப உத்தியோகத்தர்கள் சங்கத்தின் தென்கிழக்குப் பல்கலைக்கழக செயலாளராக தொழில்நுட்பவியல் பீடத்தின் தொழில்நுட்ப உத்தியோகத்தர் சலீம் றமீஸ் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
இலங்கை பல்கலைக் கழகங்களின் தொழில்நுட்ப உத்தியோகத்தர்கள் சங்கத்தின் 2017 ஆம் ஆண்டுக்கான வருடாந்த பொதுக் கூட்டம் இச் சங்கத்தின் தலைவர் திரு. பி.கே.ஏ.டயஸ் விஜய குமார தலைமையில் பண்டாரவளை மடவல பிரதேசத்தில் அமைந்துள்ள குருத்தலாவ சென்ட் தோமஸ் கல்லூரியில் நடைபெற்றது. இக் கூட்டத்தில் இலங்கை பல்கலைக் கழகங்களின் தொழில்நுட்ப உத்தியோகத்தர்கள் சங்கத்தினால் பல்கலைக்கழகங்களின் செயலாளர்கள் தெரிவு செய்யப்பட்ட போதே தென்கிழக்குப்பல்கலைக் கழக தொழில்நுட்ப உத்தியோகத்தர்களின் செயலாளராக சலீம் றமீஸ் இங்கு தெரிவு செய்யப்பட்டார்.
சமாதான நீதவானும், சிரேஷ்ட ஊடகவியலாளருமான இவர் சமூக அமைப்புக்கள், கிராம அபிவிருத்திச் சங்கம், கிராம சிவில் பாதுகாப்பு குழு,கலாசார மன்றம், பாடசாலை அபிவிருத்திக் குழு போன்ற இன்னும் பல சமூக பொது அமைப்புக்களில் தலைவர், செயலாளர் பதவிகளை வகித்து வருகின்றார். இவர் தென்கிழக்குப் பல்கலைக் கழக ஊழியர் சங்கத்தின் உதவிச் செயலாளர் என்பதும் குறிப்பிடத்தக்கது.