நோட்டன் பிரிட்ஜ் நிருபர்மு.இராமச்சந்திரன்-
ஹட்டன் நகரிலுள்ள பிரபல வர்த்தக நிலையமொன்று உடைத்து கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர். ஹட்டன் நகர பிரதான வீதியிலுள்ள பல்பொருள் மொத்தவிற்பனை நிலையமே 14.08.2017 அதிகாலை இம்தெரியாதோரால் உதைத்து கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.
வர்த்தக நிலைய உரிமையாளர் இன்று காலை வர்த்தக நிலையத்தை நிறந்துஉள்ளே சென்று பாரத்தபோதே வர்த்தக நிலையத்தின் மேல்மாடியின் பின்புரம் வழியாக உடைத்துகொண்டு உள் நுளைந்து கொள்ளைடித்து சென்றுள்ளமை தெரியவந்துள்ளது
உரிமையாளரினால் ஹட்டன் பொலிஸ் நிலையத்தில் முறைபாடு செய்யப்பட்டதையடுத்து மோப்ப நாயின் உதவியுடன் தேடுதல் நடவடிக்கையில் பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் பணம்.சிகரெட் பக்கட்டுக்கள். மற்றும் கைபேசி மீள்நிரப்பு அட்டைகள் என்பன கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாகவும் கொள்ளையடுக்கப்பட்ட பெருமதி தொடர்பில் இதுவரையில் கண்டறியப்பவில்லை எனவும் சம்பவம் தொடர்பில் விசாரணையை முன்னெடுத்து வருதாகவும் அட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.