காரைதீவு நிருபர் சகா-
இலங்கை நிருவாக சேவை தரம் 1க்கு பதவியுயர்வுபெற்ற மூன்று அதிகாரிகள் நேற்று (16) புதன்கிழமை தொடக்கம் புதிய பிரதேசசெயலகங்களுக்கு பிரதேச செயலாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். முதலாந்தர நிருவாக அதிகாரிகளுக்கு இடமளித்தல் எனும் கொள்கையின்கீழ் பொதுச்சேவைகள் ஆணைக்குழு இந்நியமனத்தை இடமாற்றம் மூலம் செய்துள்ளது.
கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களப்பணிப்பாளராகவிருந்த திருமதி சிவப்பிரியா வில்வரெத்தினம் நேற்று(16) களுவாஞ்சிக்குடி பிரதேச செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். அவர் நேற்று பதவியேற்றுள்ளார். இவர் ஏலவே பட்டிப்பளை பிரதேச செயலாளராகவிருந்து கிழக்கு மாகாண பண்பாட்லுவல்கள் திணைக்களப் பணிப்பாளராக சிறந்த சேவையாற்றியவர். இறுதியாக கல்முனையில் மாகாண தமிழ் இலக்கிய விழாவை திறம்பட நடாத்தியவரும் இவரே. நிருவாகசேவையில் 11வருடகாலம் சேவையாற்றியவர்.
களுவாஞ்சிகுடி பிரதேச செயலாளராகவிருந்த எஸ்.ரங்கராஜன் நாவிதன்வெளி பிரதேச செயலாளராக றியமிக்கப்பட்டுள்ளார். நாவிதன்வெளி பிரதேச செயலாளராகவிருந்த எஸ்.கரன் ஓட்மாவடிப் பிரதேச செயலாளராக நியமனம் பெற்றுள்ளார்.
கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களப்பணிப்பாளராக இதுவரை எவரும் நியமிக்கப்படவில்லையென்பது குறிப்பிடத்தக்கது.
