நடைபெறவுள்ள தரம் ஐந்து புலமைப் பரீட்சையில் தோற்றும் மாணவர்கள் சிறந்த பெறுபேற்றை பெற வேண்டுமென வாழ்த்துவதாக கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்துள்ளார்.
நடைபெறவுள்ள தரம் ஐந்து புலமை பரீட்சை தொடர்பா அவர் விடுத்துள்ள வாழ்த்து செய்திலயே அவர் மெற் சொன்னவாறு தெரிவித்துள்ளார்.
அவர் தொடர்ந்து தெரிவித்துள்ளதாவது:
தரம் ஐந்து புலமைப் பரீட்சையில் தோற்றும் மாணவர்கள் தமது அறிவு மட்டத்தை மேலோங்கும் வகையில் சிறந்த முறையில் பரீட்சைகளில் கவனம் செலுத்த வேண்டும்.
குறிப்பாக கிழக்கு மாகாணம் கல்வியில் பின் தங்கிய மாகாணமாக கானப்படுகின்றது அதிலும் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள மாணவர்களின் கல்வி அடைவு மட்டத்தை அதிகரிக்கும் வகையில் பல்வேறுபட்ட வேலைத் திட்டங்களை மேற்கொண்டு வரும் நிலையில் மாணவர்களும் தங்களுடைய அடைவு மட்டத்தை அதிகரிக்க திறமையாக பரீட்சை எழுத வேண்டும்.
எனவே தாங்கள் எவ்வித இடையூறும் இன்றி சிறந்த முறையில் பரீட்சையில் தோற்றி சிறந்த பெறுபேற்றை பெற்று நாட்டிற்;கு பெறுமை சேர்க்க எல்லாம் வல்ல இறைவணைப் பிராத்திக்கிறேன் என்றும் தெரிவித்துள்ளார்.
