போலிக்கடிதம் வழங்கிய அதிபர்கள் மற்றும் வலயக்கல்விப்பணிப்பாளர்களுக்கு விசாரணை

டக்கு கிழக்கு மாகா­ணங்களில் தொண்­டர் ஆசி­ரி­யர்­க­ளா­கக் கட­மை­யாற்­றா­த­வர்­களை தொண்­டர் ஆசி­ரி­யர்­க­ளா­கக் கட­மை­யாற்­று­கின்­ற­னர் என்று போலி­யான உறு­திப்­பத்­தி­ரங்­களை வழங்­கிய பாட­சா­லை­க­ளின் அதி­பர்­க­ளும் அதனை உறு­திப்­ப­டுத்­தி­ய­ வ­ல­யக் கல்­விப் பணிப்­பா­ளர்­க­ளும் விசா­ர­ணைக்கு உட்­ப­டுத்­தப்­ப­ட­வுள்­ள­தாக கல்வி அமைச்சு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

விரை­வில் இந்த விசா­ரணை நடத்­தப்­ப­டும் என்று மாகாணக் கல்வி அமைச்­சு வட்டாரங்களில் இருந்து உறுதிப்படுத்தப்பட்ட தகவல் வெளியாகியுள்ளது.

தகு­தி­யற்ற தொண்­டர்­க­ளுக்கு உறு­திப்­ப­டுத்­தல் கடி­தம் வழங்­கிய அதி­பர்­க­ளுக்­கும் அதனை உறு­திப்­ப­டுத்­திய வல­யக் கல்­விப்­ப­ணிப்­பா­ளர்­க­ளுக்­கும் எதி­ரா­க­ உரிய நடை­மு­றை­க­ளின் பிர­கா­ரம் திணைக்­கள ரீதி­யி­லான விசா­ரணை நடத்­தப்­ப­டவுள்ளது.

நிய­ம­னம் வழங்­க­லில் உள்ள விதி­மு­றை­க­ளில் தொண்­ட­ரா­சி­ரி­யர்­கள் 2011 டிசெம்­பர் முத­லாம் திக­திக்கு முன்­பி­ருந்து தொடர்ச்­சி­யாகப் பணி­யாற்­றி­யி­ருக்க வேண்­டும் என்ற நிபந்­த­னை­யுண்டு. ஆனால் பலர் 2011 ஆம் ஆண்­டி­லேயே உயர்­த­ரப் பரீட்­சைக்கு முதல் தட­வை­யா­க­வும் மேலும் சிலர் இரண்­டா­வது தட­வை­யா­க­வும் தோற்­றி­யுள்­ள­னர். அவ்­வா­றி­ருந்­தும் பாட­சா­லை­க­ளின் அதி­பர்­கள் உறு­திப்­ப­டுத்­தல் கடி­தம் வழங்­கி­யுள்­ள­னர். இது ஏற்­றுக்­கொள்ள முடி­யாத செயல் என்று குறிப்பிடப்பட்டள்ளது.

குறிப்பு- இவ்வாறான நியமனங்கள் தத்தமது பிள்ளைகளின் எதிர்காலத்தை வீணாக சீரழிக்கும்.இப்படி தெரிவு செய்யப்படும் ஆசிரியர்கள் சம்பளத்தை மாத்திரம் எடுத்து விட்டு எமது மாணவ செல்வங்களின் எதிர்காலத்தை சிதைப்பர் என்பது திண்ணம்.இதனை பல அரசியல்வாதிகள் இன்னும் விளங்குறார்கள் இல்லை.ஊடகங்கள் மூலமாக நாம் அழுத்தங்களை கொண்டு வர வேண்டும் என இந்த செய்தி எழுதப்பட்டுள்ளது.சும்மா வீட்டில் நின்ற அநேகமான பெண்கள் தொழிலுக்காக ஆயிரக்கணக்கான பணத்தை கொடுத்து இவ்வாறு உறுதிக்கடிதத்தை பெற்றுள்ளனர்.அல்லாஹ் போதுமானவன் இந்த செயற்பாடு புனித நோன்பு காலத்தில் நடந்து உள்ளமை மிக கேவலமானது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -