அப்துல்சலாம் யாசீம்-
குருநாகல்- கெக்குனுகொல்ல அரக்கியால ரவ்லத்துல் ஹாபிழீன் அரபிக்கல்லூரி மாணவர்கள் இருவர் மாவிலாறு குளத்தில் தோணியிலிருந்து தவறி விழுந்து நீரில் மூழ்கி இன்று (15) உயிரிழந்துள்ளதாக சேறுநுவர பொலிஸார் தெரிவித்தனர். இவ்வாறு உயிரிழந்தவர்கள் கெக்குனுகொல்ல-அரக்கியால பகுதியைச்சேர்ந்த எம்.என்.எம்.அப்துல்லாஹ் (11வயது) மற்றும் எம்.எச்.எம்.அப்துல்லாஹ் (18வயது) ஆகியோர் எனவும் தெரியவருகின்றது.
குறித்த அரபிக்கல்லூரி மாணவர்கள் மூதூரில் திருமண வீடொன்றிற்கு வருகை தந்த போது மாவிலாறு குளத்தை பார்வையிட சென்ற வேளை தோணியில் பயணித்ததாகவும் அதனையடுத்து தோணி கவிழ்ந்ததாகவும் ஆரம்பகட்ட விசாரணையின் போது தெரியவருகின்றது.
உயிரிழந்த இரண்டு மாணவர்களின் சடலங்களும் சேறுநுவர பிரதேச வைத்தியசாலையில் வைக்கப்ட்டுள்ளது. விசாரணைகளை சேறுறுவர பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
