மூன்று இனங்களும் விரும்பக்கூடிய தீர்வு என்பது கானல்நீரை போன்றதே..!

சோல்பரிக் ஆணைக்குழு 21வயதுக்குற்பட்ட எல்லா மக்களுக்கும் வாக்குரிமை என்ற சட்டத்தை எப்போது கொண்டுவந்தததோ அன்றே ஆரம்பித்து விட்ட வியாதிதான் தன்ட தன்ட இனத்தை சூடாக்கி வாக்குகளை கொள்ளையடிக்கும் படலமானது ஆரம்பிக்கப்பட்டது.

இலங்கை சுதந்திரம் அடைவதற்கு முன் சட்டசபைக்கு தெறிவு செய்யப்படும் உறுப்பினர்களை தெறிவுசெய்வதற்கு 4 சதவிகிதமான மக்கள்தான் அன்று வாக்குரிமை பெற்றிருந்தார்கள்.

படித்தவர்களும் நிலச்சொந்தக்காரர்களுமே வாக்களிக்கும் உரிமை இருந்தபோது, அவர்கள் எந்த இனம் என்று பார்க்காமல் படித்தவர்களா என்றுபார்த்து அவருக்கு வாக்களித்து அவரையே சட்டசபைக்கு தங்களின் பிரதிநிதியாகவும் தெறிவு செய்தார்கள்,
அந்த வகையில் படித்தவர் என்ற முறையில் சேர் பொன்ராமநாதனை இலங்கை மக்கள் தெறிவு செய்தவரலாருகளும் உண்டு.

அதன் பிறகு நம் நாட்டு அரசியல்வாதிகள் பாராளுமன்றம் செல்வதற்கு மக்களின் வாக்குகள் தேவைபட்டபோது அவர்களுக்கு இலேசாகபட்ட விடயம்தான் தன்ட தன்ட இனங்களை இனவாத ரீதியாக உசுப்பேத்தி வாக்குகளை கொள்ளையடிக்கும் முறையாகும்.

தேர்தல் காலங்களில் சிங்கள அரசியல்வாதிகள் தமிழர்களை எதிரியாக காட்டியும், தமிழ் அரசியல்வாதிகள் சிங்களவர்களை எதிரியாக காட்டியும் வாக்குகளை பெறுவதற்கு பயன்படுத்திக்கொண்டார்கள், இதன் காரணமாக இந்த இனவாத விடயங்களின் தார்ப்பரியங்களை அதுவரை அறியாதிருந்த இரு இன பாமரமக்களும் இவர்களின் இனவாத கோசங்களினால் கவரப்பட்டு ஒவ்வொரு இனத்தையும் வெவ்வேறு விதமாக பார்க்கத் துவங்கிவிட்டார்கள்.

சிங்கள மக்களிடம் தனிச்சிங்கள சட்டத்தை கொண்டுவருவோம், பௌத்தத்தை காதுகாப்போம் என்று தங்களுடைய அரசியல் ஆதாயங்களுக்காக சும்மா கிடந்த சங்கை ஊதிக்கெடுப்பது போன்று சிங்கள மக்களை ஒரு பக்கம் உசுப்பேத்திக் கொண்டிருந்தபோது, மறுபக்கம் தனிஈழம்தான் ஒரேவழி என்று தமிழ் அரசியல்வாதிகளும் கோசம் போட்டுக்கொண்டிருந்தார்கள்.

ஆனால் தேர்தல் முடிந்தகையோடு அந்த கோசங்களை மூட்டை கட்டிவைத்துவிட்டு எல்லா அரசியல் தலைவர்களும் அரசாங்கங்களுக்கு ஒத்துழைத்து செயல்படுவார்கள், இந்த நாடகத்தை புரிந்து கொண்ட தமிழ் இளைஞர்கள் ஆயுதம் ஏந்தி போராடுவதே ஒரே வழி என தீர்மானித்து களத்தில் இறங்கியபோதுதான் தமிழ் தலைவர்களுக்கும் புரிந்தது "தலைக்கு மேலே வெள்ளம் சென்றுவிட்டது" என்ற விடயமாகும்.

இருந்தாலும் தமிழ் இளைஞர்கள் ஆயுதம் ஏந்த உதவி செய்த இந்தியாவின் நோக்கம் இலங்கையை தனது கைக்குள் கொண்டுவரும் நோக்கமேயாகும்.
அந்த நோக்கத்தை 1987ம் ஆண்டு ஏதோ ஒருவகையில் இந்தியா அடைந்து கொண்டபோதுதான் அதற்கு பகரமாக இலங்கை அரசாங்கத்தின் மூலம் தமிழ் மக்களுக்கான தீர்வாக 13வது திருத்தச்சட்டத்தை கொண்டுவந்த விடயமாகும்.

அதில் திருப்தி இல்லாது விட்டாலும், இந்தியாவுக்கு பின்னால் இருந்து கொண்டு மேலும் உரிமைகளை பெறுவதற்கு ஆயுதம் ஏந்திய இயக்கங்கள் முயற்சி செய்திருக்கவேண்டும் ஆனால் அது நடைபெறவில்லை, மாறாக அவர்களுக்கு எதிராகவே போராடத்துவங்கி விட்டார்கள் அதன் விளைவுகள் பின்னாலில் எப்படி நடந்து முடிந்தது என்பதை நாம் எல்லோரும் அறிந்த விடயம்தான்.

இப்போது ஆயுதப்போராட்டம் முடிவுக்கு வந்த நிலையில் சிங்கள ஆட்சியாளர்கள் நியாயமான தீர்வுகளை வழங்குவார்களா என்ற கேள்விக்கு விடை இல்லை என்றே கூறவேண்டியுள்ளது.
எல்லா சமூக மக்களும் ஏற்றுக்கொள்ளக்கூடிய தீர்வு ஒன்றை வழங்கக்கூடிய கல நிலவரம் தற்போதைக்கு தென்படவில்லை.

அப்படி ஒரு தீர்வை வழங்கமுற்பட்டால் சிங்கள மக்கள் இந்த சூழ்நிலையில் அதற்கு ஒத்துக்கொள்ளவும் மாட்டார்கள், அதேநேரம் அவர்களின் வாக்குகளை இழப்பதற்கு சிங்க அரசியல்வாதிகளும் விரும்பவும் மாட்டார்கள், இந்த நிலையில் தமிழர்களின் பிரச்சினை தீர்க்கப்பட வழி தென்படுவதாக தெறியவில்லை. 13வது திருத்தச்சட்டம் கொண்டுவந்தபோது இந்தியாவின் அச்சுருத்தல் அன்று இலங்கைக்கு இருந்தது, அதனால் சிங்கள மக்கள் அந்த நேரம் அமைதியாக இருந்துவிட்டார்கள், ஆனால் அப்படி ஒரு நிலை இப்போது இல்லை அதனால் சிங்கள மக்கள் இந்த விடயத்தில் பொறுமையாக இருப்பார்கள் என்பது சந்தேகமான விடயம்தான்.

"பல்லுக் கலட்டப்பட்ட பாம்பின் சீற்றத்தை" யாரும் கண்டுகொள்ள மாட்டார்கள் என்பது போல, தமிழர்களின் போராட்டத்தை யாரும் கண்டு கொள்ளும் நிலையிலும் யாரும் இல்லை, இருந்தாலும் உலகநாடுகளுக்கு தாஜா காட்டிக்கொண்டு பிரச்சினைகளை தீர்ப்பதாக நாடகமாடிக்கொண்டும் காலத்தை கடத்தி செல்வார்களேயொழிய வேறொன்றும் இங்கே நடக்கபோவதில்லை.

இதற்கெல்லாம் காரணம் அரசியல்வாதிகள்தான் என்பது தெளிவான விடயங்களாகும், வாக்குவங்கிகளை இழந்துவிடக்கூடாது என்ற விடயத்தில்தான் கண்ணும் கருத்துமாக இவர்கள் இருப்பார்களேயொழிய பிரச்சினைகளை தீர்த்துவிடுவோம் என்ற நல்ல என்னம் கிஞ்சித்தும் இவர்களிடம் கிடையாது என்பதே உண்மையாகும்.

ஆகவே, வாக்குகளை கவர்வதற்காக சொல்லப்பட்ட மந்திரங்கள் தற்போது தங்களுக்கு எதிராகவே நின்று விளையாடுகின்றது என்பதை புரிந்து கொண்டுள்ளார்களா? என்ற விடயம் இப்போதும் சந்தேகமாகவே உள்ளது எனலாம்.

இதன் காரணமாக மூவின மக்களும் விரும்பும் தீர்வு என்பது கானல்நீர்தான் என்பதே யதார்த்தமாகும்.

எம்எச்எம்இப்றாஹிம்
கல்முனை..
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -