முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவை வீழ்த்த பிரதான காரணமாக அமைந்த வெள்ளை வேன்கலாச்சாரமும் கிரீஸ் பூதமும் மீண்டும் இலங்கை நாட்டில் தலை தூக்கியுள்ள நிலையில் அதனை வைத்து அரசியல்செய்த இன்றைய ஆட்சியாளர்கள் தங்களது முகங்களை எங்கே கொண்டு புதைத்து கொள்ளப் போகிறார்கள் எனபாராளுமன்ற உறுப்பினர் நாமல் கேள்வி எழுப்பியுள்ளார். கூட்டு எதிர்கட்சியின் ஏற்பாட்டில் அனுராதபுரம் ஹொரவபதான பகுதியில் இடம்பெற்ற கூட்டம் ஒன்றில் அவர் இவ்வாறு கேள்வி எழுப்பியுள்ளார்.
அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்,
முன்னாள் ஜனாதிபதியின் ஆட்சிக் காலத்தில் வெள்ளை வேன்களில் ஆட்களை கடத்தியதாகவும் கிரீஸ் பூதம் விவகாரகமும் அவரை ஆட்சியை விட்டு வீழ்த்துவதற்கு இன்றைய ஆட்சியாளர்கள் அன்று பிரதான ஆயுதங்களில்ஒன்றாக கையில் ஏந்தி இருந்தனர்.
தற்போது தனியார் மருத்துவ பல்கலைக்கழகமான சைட்டமுக்கு எதிராக போராடிய ரயானை வெள்ளை வேனில்கடத்த முயற்சி செய்துள்ளனர். தற்போது தென் பகுதியில் கிரீஸ் பூதங்களின் அட்டகாசங்கள் அதிகரித்துள்ளதாகவும் அறிய முடிகிறது.
இன்றைய ஆட்சியாளர்கள் உண்மையாளர்களாக இருப்பின் குறித்த கைது நடவடிக்கையில் ஈடுபட்டவர்களை ஒருகுறுகிய காலப்பகுதியினுள் கைது செய்து நீதியின் முன் நிறுத்த வேண்டும். அல்லாது போனால் முன்னாள்ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவிடம் மன்னிப்பு கோருவதோடு மரியாதையாக தங்களது பதவிகளை இராஜினாமாசெய்து வீடுகளில் அமர்ந்துகொள்ள வேண்டும்.
அன்றைய பாணியிலான அடக்கு முறைகள் இன்றும் தொடர்கின்றதென்றால் அன்று குறித்த விடயங்களைச் செய்வித்தவர்கள் இன்றும் இவ்வாட்சியில் இருக்க வேண்டும். குறித்த விவகாரத்துக்கு பயன்படுத்தப்பட்டவாகனமானது நிதி அமைச்சின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனை இவ்வரசின் நெருகியவர்களே முன்னெடுத்தார்கள் என்பதற்கு இதனை விட என்ன சான்று வேண்டும். அன்று இன்றைய ஆட்சியாளர்களே இவ்வாறான நடவடிக்கைகளை முன்னெடுத்து அனைத்தையும் முன்னாள் ஜனாதிபதியின் தலையில் போட்டு இலங்கை மக்களை மடையர்களாக்கி அவர்கள் திட்டமிட்டபடி ஆட்சியை கவிழ்த்து வெற்றி பெற்றுவிட்டார்கள்.
குறுக்கு வழியில் கைப்பற்றிய ஆட்சி இவர்களுக்கு நிலைக்கப்போவதில்லை. மிக விரைவில் இவர்கள் ஆட்சியைவிட்டும் விரண்டோடும் காலம் வரும். அதற்கு மக்கள் தயாரிக்கிறார்கள். நான் ஜனாதிபதி மைதிரிபால சிரிசேனவை ரகசியமாக சந்திந்து பேசியதாக ஊடகங்களில் செய்திவந்துள்ளது. மஹிந்த ராஜபக்ஷவிடம் அவரின் புதல்வரிடமும் ரகசிய பேச்சுவார்த்தை என்று ஒன்று இல்லை நாம்செய்வதை வெளிப்படையாக செய்பவர்கள்.