கடந்த சில நாட்களாக சுகயீனமுற்று, கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலை ஒன்றில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையிலேயே அவர் இன்று காலமானதாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
1977 ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத்தேர்தலில் கல்முனைத் தொகுதி சார்பாக ஐ.தே.கட்சியில் போட்டியிட்டு, வெற்றிபெற்ற அவர் 17 வருடங்களாக பாராளுமன்ற உறுப்பினராககடமையாற்றினார்.
இதன்போது அப்போதைய ஜனாதிபதி ஜே.ஆர். ஜயவர்த்தன தலைமையில், யாழ்ப்பாணம் மற்றும் முல்லைத்தீவு அமைச்சராகவும், வர்த்தகம், வாணிபம் மற்றும் கப்பல்துறை அமைச்சராகவும் பணியாற்றினார்.
அதன்பின்னர் அரசியல் வாழ்க்கையிலிருந்து ஓய்வு பெற்ற அவர், சில காலம் குவைட் நாட்டின் இலங்கைக்கான தூதுவராகவும் கடமையாற்றினார்.
