வருடத்துக்கு 7000 பேர் வரை இதன் மூலம் மரணிகின்றார்கள் !!!
இந்த புள்ளி விபரங்கள் பார்த்தவுடன் ஆச்சரியமாக இருக்கலாம் ? ஆனால் அதுதான் உண்மை 2006 National Academies of Science’s Institute of Medicine (IOM) அறிக்கையின் படி.
போதுவாகவே கைல துண்ட தந்தாலே பாக்கும் போது எப்படி இங்கிலீஷ் படித்து இருந்தாலும் பலருக்கு தலை சுத்தும.
இதனாலேயே பலரும் பாக்காமல் அப்படியே பாமசி கொண்டு போய் துண்ட கொடுத்தா !!!!
யாரும் அறியாத அந்த வைத்தியரின் கையளுத்தினை பார்த்தவுடன் பின்னால் திரும்பி எழுதிய மருந்து மாத்திரைகளை அப்படியே எடுத்து மேசை மீது வைக்கும்போது தான் ஆச்சரியத்துடன் அஹ் இதை தானா வைத்தியர் எழுதினார் என்று மனசுக்குள்ளேயே பேசியவர் அதிகம் !
இங்கு அணைத்து வைத்தியர்களும் இவ்வாறு எழுதுவது கிடையாது , ஆனால் எல்லா இடத்திலும் இது தான் நடக்கிறது !!!
அவர்கள் எழுதுவது மிகவும் பயங்கரமான கையெழுத்து அதனால் அது கூடாத எழுத்து என்று இல்லை அவர்கள் எழுதுவது மற்றவர்களால் வாசித்து விளங்க முடியாத ஒரு கையழுத்து. கொஞ்சம் மிஸ் ஆகினால் ஆள் அவுட் தான்
எனக்கு or நெருகிய உறவுக்கோ எதாவது நோய் ஏற்பட்டால் நம்பி போவது வைத்தியரிடம் தான். பத்து நிமிடமோ ஒரு மணித்தியாலமோ ஒருவரை பரிசோதித்த வைதியாரால் ஒரு நிமிடம் அதற்கான மாத்திரைகளை தெளிவாக எழுதி கொடுக்க முடியாமல் போவதன் காரணம் என்ன ?
என்னை பொறுத்த வரைக்கும் விலை குறைத்து கேட்கமுடியாத வியாபாரம் என்றால் இதுதான் இருக்க முடியும். ஒருவரை அந்தரத்தில் வைத்து வியாபாரம் செய்யும் தொழிலும் இதுதான்.
தருகின்ற மருந்து மாத்திரைகள் வைத்தியர் மீது வைத்த நம்பிக்கை மூலம் சாதாரண மகன் தொடக்கம் படித்தவர் வரைக்கும் தனது நோய் குணமாகிவிடும் என்ற நம்பிகையில் தான் அருந்தவும் செய்கின்றனர் ,
Medicine Mafia என்று நாம் அறியாத வகையில் உள்ளால் நடக்கும் வியாபாரம் தேடி பார்த்தல் அதிர்ந்து போகும் ஆச்சரியங்கள் அடங்கிய மருந்து மாத்திரைகள் விற்பனை செய்யும் நிறுவனங்கள் வியாபார நோக்கோடு புதிதாய் அறிமுகப்படுத்தும் உற்பத்திகளை ஊரில் உள்ள வைத்தியர்கள் மூலம் கட்சிதமாய் காய் நகர்த்துவது பலரும் அறிந்துகொள்ள முடியாத உண்மை.
ஒரு சாதாரண பொருளினை வாங்கும்போது எந்த நாடு ! அதன் தன்மை என்ன என்று பல மணி நேரம் பார்கும் நாம் “ வெள்ளை பேப்பரில் தரும் மருந்து மாத்திரைகளை பார்ப்பது இல்லை “ இதுதான் எமது பலகீனம்
இனியும் வைத்தியரிடம் பரிசோதனைகள் மேற்கொள்ளும் சமயம் அவர் எழுதும் போது sir கொஞ்சம் தெளிவா எழுதுங்க sir என்று சொல்வதுக்கு வெட்க படாமல் இருப்போம் !
ஏனோ நாம் நோயாளியாக இருபதனால் யாரும் கேட்பது இல்லை என்று என்ன தோன்றுகிறது !!!
அப்படி என்னதான் காரணமாக இருக்கும் !