ஏழை பெண்ணுக்கு ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகள்

ல்லாரி: ஏழை பெண்ணுக்கு ஒரே பிரசவத்தில் இரு பெண் மற்றும் இரு ஆண் என மொத்தம் 4 குழந்தைகள் பிறந்தன.பல்லாரி தாலுகா, எம்பிகனூரு கிராமத்தை சேர்ந்தவர் பசவராஜ். இவரது மனைவி ஹூளிகம்மா(26). நிறைமாத கர்ப்பமாக இருந்தார். அவரை பரிசோதனை செய்து வந்த தனியார் மருத்துவமனை டாக்டர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்து கண்காணித்து வந்தனர். இந்நிலையில் நேற்று முன்தினம் பிரசவ வலி அதிகரித்ததால், ஹூளிகம்மா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பிரசவத்தின் போது ஹூளிகம்மாவுக்கு முதலில் ஆண் குழந்தை பிறந்தது, இதைத்தொடர்ந்து இரண்டாவதாக ஒரு ஆண் குழந்தையும், மூன்றாவது மற்றும் நான்காவதாக இரு பெண் குழந்தைகளும் பிறந்தன.

பிரசவத்திற்கு பின் 4 குழந்தைகள் மற்றும் தாய் நல்ல ஆரோக்யத்துடன் உள்ளனர். இதுகுறித்து மருத்துவமனை கண்காணிப்பாளர் டாக்டர் மரிராஜ் ஜேர் கூறுகையில், கடந்த ஒரு மாதத்திற்கு முன்னரே ஹூளிகெம்மா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து ஒரு மாதமாக சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. நேற்று முன்தினம் அவருக்கு நல்ல முறையில் அறுவை சிகிச்சை செய்து 4 குழந்தைகளும் பத்திரமாக எடுக்கப்பட்டன. தற்போது தாயும் குழந்தைகளும் நலமுடன் உள்ளனர் என்றார்.(தி)
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -