சுகாதார அமைச்சர் நஸீர் அவர்களின் பெருநாள் வாழ்த்துச்செய்தி

“02. நோன்பு பெருநாள் தொழுகைக்கு செல்லுமுன் பேரீத்தம்பழம் போன்ற சிறு உணவுகளை உட்கொள்வது விரும்பத்தக்கது. ‘ நபி ஸல்லள்ளாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் நோன்பு பெருநாள் தினம் சில பேரீத்தம்பழங்களை சாப்பிடும் வரை தொழுகைக்கு செல்லமாட்டார்கள். என அனஸ் (ரழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள். (புகாரி : 953)”

அல்லாஹ்வின் வேத மறைக் கூற்றுக்கு இசைவாகவும், அண்ணல் எம் பெருமானார் (ஸல்) அவர்களின் அழகிய முன்மாதிரியான வழிகாட்டல்களுக்கு இணக்கமாகவும் நடந்து, நமது செயற்பாடுகளை முன்னெடுத்துச் செல்வோமாக ! இவ்வாறு நாம் நேரான வழியில் எமது அனைத்துக் காரியங்களையும் சீராக அமைத்துக்கொண்டால் இக்காலகட்டத்தில் முஸ்லிம்களுக்கு எதிரான சதிமுயற்சிகள் அனைத்தையும் தவிடுபொடியாக்கி எமது இலட்சியப் பயணத்தை வெற்றிகரமாக தொடரமுடியுமென்ற நிச்சயிக்கப்பட்ட நம்பிக்கை எனக்குண்டு. என கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல். முஹம்மட் நஸீர் தனது நோன்பு பெருநாள் வாழ்த்துச்செய்தியில் தெரிவித்தார்.

ஆகவே, புனித நோன்புப்பெருநாள் எம் அனைவரையும் மனிதத்தை மதிக்கும் மக்களாகவும், புனித பணி தொடர்கின்ற நல்லவர்களாகவும் புடமிடுமாக! எல்லாம் வல்ல அல்லாஹ்வின் பாதுகாப்பும், நல்லாசியும் எமக்கெல்லாம் மாரி மழையாய்ப் பொழிய வேண்டுமென இப்பொன்னான நோன்புப்பெருநாளில் மனப்பூர்வமாக பிரார்த்தனை செய்கின்றேன். உங்கள் அனைவருக்கும் எனது ஈதுல் பித்ர் நல்வாழ்த்துகள்.

சமூக ஒற்றுமைக்காகவும், நமது இன ஒற்றுமைக்காவும் இந் நாள் பிராத்திப்போமாக..!!
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -