எம்.வை.அமீர்-
சாய்ந்தமருது வோலிவோரியன் சுனாமி வீட்டுத்திட்ட கிராமத்தில் உள்ள ஹிஜ்ரா பள்ளிவாசலில் காணப்படும் குறைகள் தொடர்பாக நாபீர் பௌண்டேசனின் தலைவர் பொறியியலாளர் உதுமான்கண்டு நாபீர் அவர்களிடம் மகஜர் ஒன்றை சமர்ப்பிக்கும் நிகழ்வும் ஜமாத்தினருடனான இப்தார் நிகழ்வும் 2017-06-25 ஆம் திகதி பள்ளிவாசலின் ஸ்தாபக தலைவர் சட்டம் ஒழுங்குகள் அமைச்சின் மேலதிக செயலாளர், ஏ.எல்.எம்.சலீமுடைய வழிநடத்தலின் கீழ் செயலாளர் எம்.எம்.உதுமாலெப்பை தலைமையில் இடம்பெற்றது.
நிகழ்வின்போது .பொறியியலாளர் உதுமான்கண்டு நாபீர் அவர்களுக்கு அவசர தேவையாக உள்ள சுற்றுமதில் தொடர்பாக சுற்றிக்காட்டப்பட்டது குறிப்பிடத்தக்கது.
நிகழ்வுகளின்போது பள்ளிவாசலின் உபசெயலாளர் றிஷாட் மஜீட் உட்பட பள்ளி நிருவாகத்தினர் மற்றும் முஹல்லாவாசிகளும் நாபீர் பௌண்டேசனின் உயர்பீட உறுப்பினர்களும் கலந்துகொண்டனர்.


