சாம்பியன்ஸ் டிராபி பைனலில் இந்தியாவுக்கு, பாகிஸ்தான் 339 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது. இதன் மூலம் இந்தியா கடுமையாக போராடி வெற்றி பெற வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. பைனலில் 2வது களமிறங்கிய இந்திய அணிக்கு அடுத்தடுத்து விக்கெட்டுகள் சரிவதால் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.
ரோகித் சர்மா முதல் ஓவரிலேயே டக் அவுட் ஆனார். 3வது ஓவரில் கப்டன் கோஹ்லி 5 ரன்னில் ஆட்டமிழந்தார். தவான் 9வது ஓவரில் 21 ரன் எடுத்து அவுட்டானார்.
13 வது ஓவரில் 22 ரன்னில் யுவராஜ்சிங் அவுட் ஆனார். 14வது ஓவரில் தோனி 4 ரன்னில் அவுட் ஆனார். தொடர்ந்து விக்கெட்டுகளை இந்திய அணி இழந்து வருவதால் கோப்பையை கைப்பற்றுமா என்பது ரசிகர்கள் மத்தியில் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.
