மனட்சாட்சியோடு நடந்து கொள்ளுங்கள்

ஜெம்சித் (ஏ) றகுமான்
மருதமுனை.

நவீனயுகத்தின் தொழிநுட்ப வளர்ச்சியானாது காலத்திற்கு அவசியமானதாகும்.மனிதனின் அறிவு விருத்திக்கும்,நவீன கண்டுபிடிப்புகளுக்கும் அத்தாட்சி இன்றைய இலத்திரனியல் சாதனங்களாகும்.தொழிநுட்ப வளர்ச்சியை பொறுத்தவரையில் சமூக வலைத்தளங்களும்,ஊடகங்களும் முதன்மை வாய்ந்தவை.சமூக வலைத்தளங்களும்,ஊடகங்களும் கத்தி முனை போன்றது.அவற்றை சரியாக பயன்படுத்த தவறுகின்ற போது பாரிய விளைவுகளை ஏற்படுத்தி விடும்.ஊடகங்களானது ஒரு நாட்டின் இராணுவத்தினை விட சக்தி வாய்ந்தவையாகும்.ஆனால் இன்று சமூக வலைத்தளங்களையும்,ஊடகங்களையும் தவறாக எம்மில் பல பேர் பயன்படுத்திக் கொண்டிருக்கின்றனர்.படித்த மேதைகள் முதல் பாமரன்வரை சமூக வலைத்தளங்களையும்,ஊடகங்களையும் கொண்டு தீர்மானங்களை மேற்கொள்ளும் நிலை காணப்படுவதால் அவற்றை தர்மமாக பயன்படுத்த வேண்டிய தார்மீக பொறுப்பு எமக்கு இருக்கின்றது.

சமூகத்திற்கு அல்லது தனிமனிதனுக்கு ஏற்படும் அநீதி,அட்டூளியங்கள் வெளிக் கொண்டு வரப்பட வேண்டியவையாகும்.ஆனால் அவை சரியான முறையில் வெளிக் கொணரப்பட வேண்டும்.சமூக வலைத்தளுங்களும்,ஊடகங்களும் மனிதனுக்கு ஏற்படும் அவலங்களை,வன்முறைகளை,அனர்த்தங்களை தெரியப்படுத்துவதன் மூலம் அவற்றிற்கான தீர்வினை பெற்றுக் கொடுக்க முடியும் என்பதை யாரும் மறுப்பதற்கில்லை.
ஆனால் அவை உண்மைத் தன்மையாகவும்,ஆராயப்பட்ட செய்தியாகவும் இருக்க வேண்டும்.

இன்றைய சூழ்நிலையை பொறுத்த வரையில் நாட்டில் ஏற்படும் பல பிரச்சினைகளுக்கு காரண கர்த்தாவாக அமைவது சமூக வலைத்தளங்களிலும் ஊடகங்களிலும் வெளியிடப்படும் உண்மைக்கு புறம்பான கற்பனையில் எழுதப்படும் செய்திகளாகும.செய்தி அல்லது தகவல் ஒன்றினை வெளியிடும் போது அதன் பின் விளைவுகள் என்னவாக அமையும் என்பதை கடுகளவேணும் சிந்திப்பதில்லை.பின்விளைவுகளை சிந்திக்காமல் வெளியிடப்படும் பல செய்திகளே இன முறுகல் அதிகரித்திருப்பதற்கு காரண கர்த்தாவாக அமைந்துள்ளது.நாம் வெளியிடும் ஒரு தகவல் அல்லது செய்தியை ஏனைய சமூகங்கள் நம் ஒட்டுமொத்த சமூகத்தின் கருத்தாகவே பார்க்கின்றனர்.

முஸ்லீம் சமூகத்தின் தனிமனிதனின் கருத்துகளும்,தகவல்களும் பெருபான்மை சமூகத்தினரால் உன்னிப்பாக அவதானிக்கப்படுகிறது.தமிழில் பதிவேற்றப்படும் செய்திகள் சிங்களத்தில் மொழிபெயர்க்கப்பட்டு சமூக வலைத்தளங்களில் சில விஷக் கிருமிகளினால் பதிவேற்றம் செய்யப்படுகிறது.எனவே எம் சமூகம் இந்த விடயத்தில் கவனம் செலுத்த வேண்டும்.இனிவரும் காலங்களிலாவது உண்மையான செய்திளை பதிவேற்றுவதோடு,இன நல்லுறவில் விரிசலை ஏற்படுத்த கூடிய ஆக்ரோஷமான, கற்பனையான செய்திகளை பதிவேற்றுவதை தவிர்த்துக் கொள்வோம்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -