நான்கு பொலிஸ் குழுக்களையும் கண்டுபிடிப்பதற்கு சர்வதேசப் பொலிஸ் குழு!?

எஸ். ஹமீத்-

கடந்த மூன்றாம் திகதி பம்பலப்பிட்டியில் பொலிஸ் காலாற்­படை தலை­மை­ய­கத்தில் வைத்து பொலிஸ் மா அதிபர் பூஜித ஜய­சுந்­தர ஊட­க­வி­ய­லா­ளர்­க­ளிடம் பேசும் போது பின்வருமாறு கூறுகிறார்:

''பொதுபலசேனா அமைப்பின் பொதுச் செய­லாளர் கல­கொட அத்தே ஞான­சார தேரரை மிக விரைவில் கைது செய்தே தீருவோம். அது தொடர்பில் யாரும் எவ்­வித சந்­தே­கமும் கொள்ளத் தேவை இல்லை. இது தொடர்­பி­லான நட­வ­டிக்­கை­க­ளுக்கு நான்கு விசேட பொலிஸ் குழுக்­களை கட­மையில் ஈடுபடுத்தியுள்ளோம். குற்­ற­மி­ழைத்த எவ­ரையும் நாம் தப்­பிக்க விடப் போவ­தில்லை. ஞான­சா­ரரின் கைது உறு­தி­யா­னது.''

மேலும் அவர் கூறுகையில்:

''சட்டம் அனை­வ­ருக்கும் பொது­வா­னது. சட்­டத்தை யாரா­வது மீறு­வார்­க­ளாயின் அந்த சந்­தர்ப்­பங்­களில் அவர்­க­ளுக்கு எதி­ராக நட­வ­டிக்கை எடுக்க நாம் பின் நிற்கப் போவ­தில்லை. அதன்­படி ஞான­சார தேரரைக் கைது செய்ய தற்­போதும் நட­வ­டிக்கை எடுக்­கப்­பட்­டுள்­ளது. அதற்­கான திட்டம் வகுக்­கப்பட்டு நான்கு விசேட பொலிஸ் குழுக்கள் கட­மையில் ஈடு­ப­டுத்­தப்­பட்­டுள்­ளன. 

சில இடங்­களில் பொலிஸார் இந்த விட­யத்தில் பக்கச் சார்­பாக நடந்­து­ கொள்­வ­தாக கூறு­கின்­றனர். உண்­மையில் பொலிஸார் தமது நட­வ­டிக்­கை­களின் போது எந்­த­வொரு இன, மதம் சார்ந்து செயற்­ப­டு­வ­தில்லை. யார் குற்றம் இழைத்­தாலும் குற்றம் குற்றம் தான். அதனால் மிக விரைவில் அந்த கைது இடம்­பெற்றே தீரும். எனவே இந்த விட­யத்தில் யாரும் சந்­தேகம் கொள்ளத் தேவையே இல்லை. இது தொடர்பில் நட­வ­டிக்கை எடுக்க நான்கு விசேட பொலிஸ் குழுக்கள் கட­மையில் ஈடு­ப­டுத்­தப்பட்­டுள்­ளன.'' என்று நெஞ்சு நிமிர்த்திச் சொல்கிறார்.

பொலிஸ் மா அதிபரின் உறுதியான, தெளிவான இந்தப் பேச்சு இலங்கையில் சட்டம், ஒழுங்கு, நீதி, நியாயத்தை விரும்புகின்ற இலட்சக் கணக்கான மக்களின் மனதில் அன்று பாலை வார்த்தது. ஆனால், இன்று, அந்த மனங்களில் எரிநெருப்பை அள்ளிக் கொட்டிவிட்டது.

அது சரி...அந்த நான்கு பொலிஸ் குழுக்களுக்கும் நடந்தது என்ன...? இத்தனை நாட்களாய் அவை எங்கே இருந்தன...? என்ன செய்து கொண்டிருந்தன...? இப்போது எங்கே இருக்கின்றன...?

இந்தக் கேள்விகளுக்குப் பதில் கண்டுபிடிக்க சர்வதேச மட்டத்திலிருந்து குறைந்தது ஐந்து பொலிஸ் குழுக்களாவது இலங்கைக்கு மிக விரைவில் வருமென்று எதிர்பார்க்கப்படுவதாக நண்பர் ஒருவர் நம்மிடம் வேடிக்கையாகக் கூறினார். அந்த வேடிக்கைக்குள் புதைந்து கிடக்கும் நமது சமுகத்தின் வேதனைகளை, ஏமாற்றங்களை, விரக்தியை நம்மால் நன்கு புரிந்து கொள்ள முடிகிறது.

நல்லாட்சியே...உனது நயவஞ்சக, நாற்ற, நபும்சகத்தனமான ஆட்சிக்கு ஒரு முடிவே கிடையாதா....?
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -