ஐ.நா. உயர் பதவியில் இலங்கைப் பெண்மணி!


லங்கையைச் சேர்ந்த திருமதி. ஜெயத்ம விக்கிரமநாயக்க ஐக்கிய நாடுகள் சபையின் இளையோர் விவகாரங்களுக்கான தூதுவராக நியமிக்கப்பட்டுள்ளார். இதுபற்றிய அறிவிப்பை ஐ.நா பொதுச்செயலர் அன்ரனியோ குரெரெஸ் வெளியிட்டுள்ளார்.

ஐ.நா பொதுச்செயலரின் இளையோருக்கான தூதுவராகப் பதவி வகிக்கும், ஜோர்தானைச் சேர்ந்த அகமட் அல்ஹெந்டாவி (Ahmad Alhendawi ) அவர்களுக்குப் பதிலாகவே இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

திருமதி.ஜெயத்ம விக்கிரமநாயக்க 2016 -2017 காலப்பகுதியில் பாராளுமன்றச் செயலாளர் நாயகத்தின் செயலாளராகப் பதவி வகித்தவர். தற்போதும் இவர் நிர்வாக சேவை அதிகாரியாக இருக்கிறார். பல்வேறு இளைஞர் விவகார அமைப்புகளில் உயர் பதவி வகித்த ஜெயத்ம விக்கிரமநாயக்க 1990ம் ஆண்டு பிறந்தவர் என்பதும் கொழும்புப் பல்கலைக் கழகத்தில் படித்துப் பட்டங்கள் பெற்றவரென்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -