சரண்-பிணை-கைது-விடுதலை...ஒரு கின்னஸ் சாதனை!

எஸ். ஹமீத்-

ல நாட்களாகப் பல பொலிஸ் குழுக்களினால் பல்வேறு குற்றங்களுக்காகத் தேடப்பட்டு வந்த ஒரு 'குற்றவாளி' நீதிமன்றத்தில் காலை சுமார் 10 மணிக்குச் சரணடைகிறார். அவருக்கு நீதிமன்றம் காலை 11 மணிக்கெல்லாம் பிணை வழங்குகிறது. சிரித்த முகத்துடன் நீதிமன்றத்தை விட்டு வெளிவந்து, ஆடம்பரக் காரிலேறி அவர் போகிறார். பின்னர் பிற்பகல் 2 மணிக்கு விஷேட பொலிஸ் குழுவொன்றினால் கைது செய்யப்படுகிறார். அவ்வாறு கைது செய்யப்பட்ட அரை மணி நேரத்திற்குள் விடுதலை செய்யப்பட்டுச் சுதந்திரமாக வெளியேறுகிறார். அடேயப்பா...என்னா வேகம், இந்த வேகம்!

பார்க்கப் போனால் உலகத்திலேயே இப்படி வேக வேகமான சரண்-பிணை-கைது-விடுதலை என்பவை நமது நாட்டில் மட்டும்தான் நடந்திருக்க முடியும். ஆமாம்...ஒரு வகையில் இது கின்னஸ் சாதனைதான், போங்கள்!

இப்படி, இன்னும் எத்தனை காலங்களுக்குத்தான் நமது காதுகளில் பூச் செருகப் போகிறார்களோ, தெரியவில்லை.

அல்லாஹ் மிகப் பெரியவன்!
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -