ஞான­சார தேர­ரினால் உயர் நீதி­மன்றில் தாக்கல் செய்­யப்ப்ட்ட அடிப்­படை உரிமை மீறல் வாபஸ்

திட்­ட­மிட்ட குற்­றங்கள் தடுப்புப் பிரிவு தன்னை கைது செய்ய முயல்­வ­தாக குறிப்­பிட்டு அதனை தடுக்­கு­மாறு கோரி பொது பல சேனாவின் செய­லாளர் கல­கொட அத்தே ஞான­சார தேர­ரினால் உயர் நீதி­மன்றில் தாக்கல் செய்­யப்ப்ட்ட அடிப்­படை உரிமை மீறல் வாபஸ் பெறப்பட்­டுள்­ளது.

நேற்­றைய தினம் குறித்த அடிப்­படை உரிமை மீறல் மனு பிர­தம நீதி­யரசர் பிரி­யசாத் டெப் தலை­மை­யி­லான மூவர் கொன்ட நீதி­ய­ர­சர்கள் குழு முன்­னி­லையில் விசா­ர­ணைக்கு வந்­தது. இதன் போதே தாக்கல்செய்த மனுவை வாபஸ் பெறு­வ­தாக ஞான­சார தேரர் உயர் நீதி­மன்­றுக்கு அறி­வித்து அதற்­கான அனு­ம­தியைப் பெற்­றுக்­கொண்டார். இத­னை­ய­டுத்து கோரிக்­கையை ஏற்று அந்த மனுவை உயர் நீதி­மன்றம் முடி­வு­றுத்­தி­யது.

ஞான­சார தேரரின் சட்­டத்­த­ர­ணி­யான ஜனா­தி­பதி சட்­டத்­த­ரணி டிரந்த வல­லி­யத்­தவின் ஆலோ­ச­னையின் பிர­காரம் இந்த அடிப்­படை உரிமை மீறல் மனு தாக்கல் செய்­யப்­பட்­டி­ருந்த நிலையில் திட்­ட­மிட்ட குற்­றங்கள் தடுப்புப் பிரிவின் பொறுப்­ப­தி­காரி பிர­தான பொலிஸ் பரி­சோ­தகர் ஜனக குமார, சட்­டமா அதிபர் ஜயந்த ஜய­சூ­ரிய உள்­ளிட்ட நால்­வரை பொறுப்புக் கூறத்­தக்க தரப்­பாக அதில் குறிப்­பி­டப்பட்­டி­ருந்­தது.

முறை­யான விசா­ரணை ஒன்­றின்றி தன்னைக் கைது செய்ய திட்­ட­மிட்ட குற்­றங்கள் தடுப்புப் பிரிவு முயல்­வ­தா­கவும், அதனால் தன்­னுடன் தொடர்­பு­பட்ட விசா­ர­ணைகள் நிறை­வுறும் வரை அல்­லது சட்ட மா அதி­பரின் ஆலோ­ச­னை­களைப் பெற்­றுக்­கொள்ளும் வரையில் தன்னை கைது செய்­வதை தடுத்து இடைக்­கால தடை உத்தர­வொன்­றினை பிறப்­பிக்­கு­மாறு அந்த மனுவில் கோரப்­பட்­டி­ருந்­தது.

இன, மதங்­க­ளுக்கு இடையில் மோதல்­களை ஏற்­ப­டுத்தும் வித­மாக செயற்­ப­டு­வ­தாக தெரி­வித்து திட்­ட­மிட்ட குற்­றங்கள் தடுப்புப் பிரிவு (ஓ.சி.பி.டி) ஒழுங்­க­மைக்­கப்பட்ட விசா­ரணை ஒன்று இன்றி தன்னை கைது செய்ய முயல்­வ­தா­கவும் இதனால் தனது அடிப்­படை உரிமை மீறப்­பட்­டுள்­ள­தா­கவும் ஞான­சார தேரரின் குறித்த மனுவில் சுட்­டிக்­காட்­டப்பட்­டுள்­ளது.

இதனால் முறை­யான விசா­ரணை ஒன்று நிறை­வுறும் வரை தன்னை கைது செய்ய வேண்டாம் என தடை உத்­தரவு பிறக்­கு­மாறு கோரி­யுள்ள ஞான­சார தேரர், தனக்கு விடுக்­கப்ப்ட்­டுள்ள உயிர் அச்­சு­றுத்தல் தொடர்பில் பொலிஸ் மா அதி­ப­ரிடம் முறை­யிட்­டுள்ள நிலையில், அந்த விசா­ர­ணை­களும் இடம்­பெற்று வரு­வ­தையும் குறித்த அடிப்­படை உரிமை மீறல் மனுவில் சுட்­டிக்­காட்­டப்­பட்­டி­ருந்­தது.

இந் நிலையில் நேற்று குறித்த மனு­வா­னது பிர­தம நீதி­ய­ரசர் பிரி­யசாத் டெப், உபாலி அபே­ரத்ன, விஜித் மலல்­கொட ஆகிய நீதி­யர­சர்கள் முன்­னி­லையில் விசா­ர­ணைக்கு வந்­தது. இதன் போது மன்றில் ஆஜ­ரா­ன­ஞா­ன­சார தேரரின் சட்­டத்­த­ர­ணி­யான டிரந்த வல­லி­யத்த, இந்த அடிப்­படை மனு ஊடாக எதிர்ப்­பார்த்த நிவா­ரணம் தற்­போதும் தமக்கு கிடைத்­து­விட்­டதால் இந்த மனுவை முன்­னெ­டுத்து செல்லும் நோக்கம் இல்லை எனவும் மனுவை வாபஸ் வாங்க அனு­ம­திக்க வேண்டும் எனவும் அவர் கோரினார். இது தொடர்பில் ஆராய்ந்த நீதி­ய­ர­சர்கள் குழு அதற்கு அனு­மதி அளித்து வழக்கை முடி­வு­று­த்­தி­யது.

ஞான­சார தேரர் நேற்று முன் தினம் கோட்டை நீதி­மன்ரில் ஆஜ­ராகி பிடி­யா­ணையை மீள பெற நடவடிக்கை எடுத்திருந்த நிலையில், பின்னர் திட்டமிட்ட குற்றங்கள் தடுப்புப் பிரிவில் ஆஜராகினார். இதன் போது கைது செய்யப்ப்ட்ட அவருக்கு பிணை வழங்க பொலிஸார் எதிர்ப்பு தெரிவிக்காததால் பிணை பெற்றுக்கொன்டு அவர் வெளியேறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -