அமெரிக்க, யூத சதியில் பலியாகும் அரபுலகம் கத்தார் மீதான தடையின் பின்னணி ...

ரேபிய தீபகற்பத்தில் ஒன்றான கத்தாருடனான உறவை துண்டித்துக் கொள்வதாக சவூதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம், பஹ்ரைன், ஏமன் மற்றும் எகிப்து நாடுகள் அறிவித்தன. இந்த பட்டியலில் லிபியா மற்றும் மாலத்திவு ஆகிய நாடுகளும் இணைந்தன.

பயங்கரவாதத்துக்கு துணை போவதாக குற்றம் சுமத்தி கத்தார் மீது அந்நாடுகள் இந்த முடிவை அறிவித்தன. அறிவித்ததோடு மட்டும் நில்லாமல் தரைவழி எல்லைகளையும்மூடி வான், கடல் வழி பாதைகளையும் தடை செய்துவிட்டன.

இதனால் அந்நாடுகளுடனான சாலை போக்குவரத்து முடங்கி யுள்ளது. உணவு பொருட்கள் தட்டுப்பாடு கத்தாரில் ஏற்பட்டு விடுமோ என்ற அச்சம் எழுந்துள்ளது. உறவை துண்டித்த நாடுகளில் உள்ள கத்தார் குடிமக்கள் இரண்டு வாரங்களுக்குள் அந்நாடுகளைவிட்டு வெளியேறி விடவேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

வளைகுடா நாடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள கத்தார், தீவிரவாதிகளுக்கு ஆதரவளிப்பதாக கூறப்படும் குற்றச்சாட்டை அடியோடு மறுத்துள்ளது.

துருக்கி அதிபர் ரஜப் தையூப் எர்துகான், குவைத் அமீர் ஷபா அல் அஹமத் அல் ஜாபர் அல்ஷபா ஆகியோர் ஜூன் 6 அன்று சவூதி சென்று சென்று சமரச முயற்சியில் இறங்கியுள்ளனர். நாங்கள் சொல்லும் பத்துக்கட்டளைகளை ஏற்று கொண்டால் கத்தாருடனான சமரசத்துக்கு நாங்கள் தயார் என சவூதி அரசாங்கம் தெரிவித்துள்ளது.

ஈரானுடனான ராஜாங்க உறவுகளை துண்டிக்கவேண்டும், இஸ்ரேல் நாட்டை பாலஸ்தீனுக்காக பெற்றுக்கொடுக்க போராடும், பாலஸ்தீன தேசியத்தை கொள்கையாக கொண்ட ஹமாஸ் இயக்க போராளிகளை கத்தாரை விட்டு வெளியேற்ற வேண்டும், ஹமாஸ் இயக்க போராளிகளின் கத்தார் நாட்டிலுள்ள வங்கி கணக்கை முடக்கவேண்டும்.

1948 முதல் அரப் - இஸ்ரேல் சண்டைக்கு உறுதுணையாக இருந்த இஹ்வான்களை கத்தார் நாட்டை விட்டு வெளியேற்ற வேண்டும், வளைகுடா கூட்டுறவு கவுன்சிலுக்கு எதிராக இருக்கக்கூடிய அனைத்து கூற்றுகளையும் வெளியேற்றவேண்டும், எகிப்திய விவகாரங்களில் தலையிடுவதை நிறுத்தவேண்டும், உலகம் முழுவதும் பார்க்கப்படும், கத்தார் நாட்டின் முன்னாள் அமீர் ஷேய்க் அஹமத் பின் கலீபா அல்தானியால் உருவாக்கப்பட்ட அல்ஜசீரா தொலைகாட்சி கத்தார் நாட்டு அரசாங்கத்தின் அதிகாரபூர்வ தொலைக்காட்சியாக செயல்படுகிறது. அந்த தொலைக்காட்சியை நிறுத்துவதோடு மட்டுமல்லாமல் அல்ஜசீரா நிறுவனம் அனைத்து வளைகுடா கூட்டுறவு கவின்சிலிடமும் மன்னிப்புக்கேட்க வேண்டும்.

வளைகுடா கூட்டுறவு கவுன்சிலிடம் எந்த ஒரு குதர்க்கம் மற்றும் முரண்பாடான எந்த செயல்களையும் செய்யாது என்று உறுதியளிக்க வேண்டும் என பத்து நிபந்தனைகளை கத்தார் அராசாங்கத்திடம் சவூதி விதித்துள்ளது.

கத்தாருடனான ராஜாங்க உறவுகளை முடக்கியுள்ளதால் அரபுலகில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.இதனால் கச்சா எண்ணெய் விலை உயருமா?லட்சக்கணக்கான வெளிநாட்டு பணியாளர்களின் வேலைவாய்ப்பு நீடிக்குமா என்ற கவலை ஏற்பட்டுள்ளது.

இந்த நெருக்கடிக்கு எல்லாம் என்ன காரணம்? என ஆராய்ந்தால் அமெரிக்க யூத சதிக்கு அரபுலகம் பலியாகிறது என்பது மட்டும் தெளிவாகத்தெரியும்.

இன்று உலகில் உள்ள 199 நாடுகளில் நான்கில் ஒரு பங்கு முஸ்லீம் நாடுகள்.உலக மக்கள் தொகையில் ஐந்தில் ஒரு பங்கினர் இஸ்லாமியர்கள்.உலக மக்கள் தொகையில் யூதர்கள் எண்ணிக்கை 0.02 சதவிகிதம் மட்டுமே.அவர்களின் ஒரே நாடு இஸ்ரேல்.அந்த இஸ்ரேல் அமெரிக்காவை கையில் வைத்துக்கொண்டு அரபுலகையே ஆட்டி படைக்கிறது.

அமெரிக்க இஸ்ரேல் நாடுகளின் நோக்கம் உலகில் உள்ள எந்த ஒரு முஸ்லீம் நாடும் ராணுவ பலம் பொருந்தியதாக ஆகக்கூடாது,அவர்களின் பொருளாதார வலிமை உயர்ந்து கொண்டே சென்றால் அதை சிதைக்க வேண்டும் என்பது தான்.

உலகில் ராணுவ வலிமை மிக்க நாடாக மட்டுமின்றி அணு ஆற்றலிலும் மிகைத்த நாடாக ஈரான் உருவானது.தனது கைப்பவையான ஐ.நா வை கையில் போட்டு கொண்டு பொருளாதார தடைகளை ஏற்படுத்தி ஈரான் அணுஆற்றல் மற்றும் ராணுவ வலிமை பெறாமல் தடுத்துக்கொண்டே இருக்கிறது அமெரிக்கா.

ரசாயன ஆயுதங்கள் இருப்பதாக அப்பட்டமான பொய் கூறி உலகை நம்பவைத்து ஈராக்கை அழித்தது, ஈரான்- ஈராக் இடையே நீண்ட கால யுத்தத்தை தூண்டிக்கொண்டே இருந்தது. 1990-1991 களில் அமெரிக்கா தலைமையில் 28 நாடுகள் அடங்கிய கூட்டுப்படையினர் ஈராக்கை சிதைத்து சின்னா பின்னமாக்கினர்.

அபரிமிதமான இயற்கை வளம் கொழிக்கும் ஆபிகானிஸ்தானை அழித்தொழித்தது.எகிப்தில் உள்நாட்டு கலவரம்,சிரியாவில் உள்நாட்டு யுத்தம், துருக்கியில் ராணுவ புரட்சி என இஸ்லாமிய உலகில் நடைபெறும் அனைத்து அலங்கோலங்களையும் அரங்கேற்றி வருவது அமெரிக்க--யூத சூழ்ச்சிதான்.

இந்த வரிசையில் இப்போது கத்தார்.கத்தாரை காரணமாக வைத்து சவூதி,அமீரகம் உள்ளிட்ட நாடுகளின் பொருளாதாரத்தை சிதைக்க கூடிய வேளையில் ஈடுபட்டுள்ளனர் .இது பெஞ்சமின் நெதன்யாகு-டொனால்ட் டிரம்ப் ஆகியோரின் கூட்டு சதி.

கத்தார் 11 ,586 சதுர கிலோமீட்டர் மட்டுமே பரப்பளவு கொண்ட சின்னஞ்சிறு நாடு.26 லட்சம் மக்கள் மட்டுமே வாழும் நாடு.இந்த மக்களில் பெரும்பான்மையானவர்கள் வெளிநாடுகளில் இருந்து வேலை வாய்ப்புக்காக வந்தவர்களே.

ஆனால் பொருளாதாரத்தில் கத்தார் உச்சத்தை தொட்டுவிட்டது.ஒரு நாட்டின் பொருளாதார நிலை,மொத்த உற்பத்தி,தனி நபர் பொருள் வாங்கும் திறன் ஆகியவற்றை கணக்கில் கொண்டு பணக்கார நாடுகள் பட்டியலிடப்படுகின்றன.அந்த வகையில் முதல் பத்து பணக்கார நாடுகள் கடந்த மார்ச் மாதத்தில் பட்டியலிடப்பட்டதில் முதலிடத்தில் இருப்பது கத்தார்.

இப்பட்டியலில் குவைத் நாலாவது இடத்திலும் ஐக்கிய அரபு அமீரகம் 6வது இடத்திலும் அமெரிக்கா 9 வது இடத்திலும் சவூதி 10வது இடத்திலும் உள்ளன.சவுதியின் உள்நாட்டு உற்பத்தி மற்றும் தனிநபர் பொருள் வாங்கும் திறன் 51924 டாலர் என்றால் கத்தாரின் திறன் 140649 டாலர். கிட்ட தட்ட மூன்று மடங்கு அதாவது மலைக்கும் மடுவுக்குமுள்ள வித்தியாசம்.

கத்தாரில் அரசு வருமானம் எண்ணெய் வளம், எரிவாயு ஏற்றுமதியிலிருந்தே கிடைக்கப்படுகிறது.கத்தாரை பார்த்து பொறாமை கொள்ளும் நிலை சவூதிக்கு என்றால்,கத்தார் பெருமளவில் முதலீடு செய்வது பிரிட்டனில். இது தான் அமெரிக்காவுக்கு எரிச்சலை ஏற்படுத்துகிறது. இது ஒரு புறம் என்றால் பாலஸ்தீன் மிகப் பெரும்பான்மையான நாடுகளின் ஆதரவோடு ஐ.நா. சபையில் இஸ்ரேல் ஆக்கிரமிப்புக்கு எதிரான தீர்மானம் கொண்டு வந்து நிறைவேற்றியது இஸ்ரேலை அதிர்ச்சி அடையவைத்துள்ளது.

பிரிட்டன், ஜெர்மனி போன்ற நாடுகள் பாலஸ்தீனத்தின் விண்ணப்பத்தை எதிர்த்து வாக்களிக்கும் என்ற இஸ்ரேலின் கனவு பொய்த்து பாலஸ்தீனத்திற்கு ஆதரவளித்தது அமெரிக்க-யூத சக்திகளுக்கு பெருத்த அடி.

அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தனது தேர்தல் பிரச்சாரத்தின் போதே இஸ்லாமிய எதிர்ப்புணர்வை பகிரங்கமாகவே வெளிப்படுத்தியவர்.காலத்தின் கோலம் ஹிலாரி கிளிண்டன் அதிக வாக்குகள் பெற்றும் அந்நாட்டு தேர்தல் நடைமுறையில் அமெரிக்க அதிபராகிவிட்டார்.

2017 ஜனவரி 20 அன்று பதவி ஏற்ற டிரம்ப் அமெரிக்கா அதிபர் என்ற முறையில் தமது முதல் சுற்றுப்பயணத்தை தொடங்கியது சவூதி அரேபியாவில் தான். அவரது 8 நாள் சுற்றுப்பயணத்தில் 2017 மே 19 அன்று சவூதி வந்த டிரம்ப் சவூதி மன்னர் சல்மான் பின் அப்துல் அஜீஸ் அல் சவூதுவை சந்தித்தார்.

அமெரிக்காவிடமிருந்து ரூபாய் ஆறறை லட்சம் கோடி ராணுவ தளவாடங்களை சவூதி வாங்க ஒப்பந்தம் செய்தார்.கத்தார் தொடர்புகளை துண்டிக்க கூறினார். ஒரே கல்லில் இரண்டு மாங்காய்.

அங்கிருந்து இஸ்ரேல் சென்றார்.பெஞ்சமின் நெதன்யாகுவை சந்தித்தார் சம்பிரதாயத்திற்கு பலஸ்தீன அதிபர் மஹ்மூத் அப்பாஸை சந்தித்தார்.பின்னர் ரோம் சென்று போப் ஆண்டவரை சந்த்தித்து முஸ்லிம்களை அழிப்பதற்கு ஆசியும் வாங்கினார்.

டிரம்பின் வருகைக்கு பின் அவரது கட்டளைப்படி சவூதி அரேபியா கத்தாரின் மீது ராஜ்ய உறவுகளை துண்டித்தது.மற்ற நாடுகளையும் துண்டிக்க செய்தது.

இத்தனைக்கும் சவூதி மன்னர் மிகச்சிறந்த ராஜ தந்திரி.சவூதி பாதுகாப்பு அமைச்சராக இருந்தவர் ராணுவத்தலைமை இவரிடமே இருந்தது. அரச குடும்பத்து சச்சரவுகளை வெளியில் தெரியாமலேயே சமரசம் செய்து வைப்பவர்.

"இஸ்லாமிய பயங்கரவாதம் வளர்வதற்கு முக்கிய காரணமே யூத,கிறிஸ்தவ பயங்கரவாதிகள் தான்.யூத கிருஸ்துவ வெறுப்பு அலை ஒருநாள் அமெரிக்காவை நோக்கி திரும்பும்.அந்த நாள் நிச்சயம் வந்தே தீரும்.மத்திய கிழக்கில் அமைதி நிலவ இஸ்ரேல் பாலஸ்தீன் மோதல் முடிவுக்கு வரவேண்டும்.இஸ்ரேல் தான் அமெரிக்காவின் மிகப்பெரிய சுமை” என 10 ஆண்டுகளுக்கு முன்பே பகிரங்கமாக அமெரிக்காவை எச்சரித்தவர் தான் சவூதி மன்னர் சல்மான் பின் அப்துல் அஜீஸ் .

அப்படிப்பட்ட மன்னர் சல்மான் தான் பதவியேற்ற இரண்டே வருடத்தில் அமெரிக்க நிர்பந்தத்திற்கு அடிபணிந்து கத்தார் மீது தடை ஏற்படுத்துகிறார்.

சவூதியுடன் சேர்ந்து ஐக்கிய அரபு அமீரகம் ராஜ்ய உறவுகளை துண்டிக்கிறது.அபுதாபி,துபாய்,ஷார்ஜா,அஜ்மான்,உம்மஅல்ல குவாய்வான் ,புஜைரா,ராஸ் அல் கைமா என்ற ஏழு அமீரகங்களின் கூட்டமைப்பே ஐக்கிய அரபு குடியரசு.இவையும் பஹ்ரைன்,குவைத்,ஓமன் உள்ளிட்டவையும் மன்னராட்சி நடைபெறும் நாடுகள்.இவர்கள் அனைவருக்குமே மன்னராட்சி காப்பாற்ற படவேண்டும் என்ற கவலை.எகிப்துக்கு இஹ்வான்கள் தலைதூக்க விடக்கூடாது என்ற அச்சம்.இதனால் அமெரிக்க நிர்பந்தத்திற்கு அடிபணிவது போல் இந்த நடவடிக்கைகள் எல்லாம் எடுக்கின்றன.

ட்ரம்ப் பகிரங்கமாகவே சமூக வலைதளத்தில் கருத்து தெரிவிக்கிறார்.கத்தார் மீதான சவூதியின் தடைக்கு தானே கரணம் என்று. சவூதி அரசும் அதை வரவேற்கிறது.

அமெரிக்காவுக்கு செல்லப்பிள்ளை இஸ்ரேல்.இஸ்ரேலுக்கு சிம்ம சொப்பனமாக விளங்குவது பலஸ்தீனின் ஹமாஸ்.காசா மீதான இஸ்ரேல் தாக்குதலில் ஹமாஸுக்கு ஆதரவளித்தது துருக்கியும் கத்தாரும் தான். சவூதியும் எகிப்தும் இஸ்ரேலுக்கு எதிராக ஹமாஸுக்கு ஆதரவளித்து இருந்தால் இஸ்ரேல் காணாமல் போய் இருக்கும். ஹமாஸை ஆதரவளிக்காவிட்டால் கூட பரவா இல்லை. இஸ்ரேலுக்கு ஆதரவாக நடந்து கொள்வதால் தான் பாலஸ்தீன் எழுத்துச்சி பெற முடியாமல் உள்ளது.

இஸ்ரேல் அணு ஆயுதங்கள் வைத்திருக்கலாம்.அமெரிக்கா மிகப்பெரிய ராணுவ வல்லரசாக இருக்கலாம்.ஆனால் பலஸ்தீனர்களுக்கு வெற்றி கிடைத்தே தீரும்.

அமெரிக்க யூத சூழ்ச்சி நீண்ட காலம் பலிக்காது."அவர்களை கொண்டே அவர்கள்" என்ற செம்டம்பர் 11 நிகழ்வை அந்நாடுகளும் மறக்காது.

ஆட்சி அதிகாரம்,சுக போக வாழ்க்கை என்பதற்காக இறைவனை மறந்து மறுமையை உதாசீனபடுத்தி அரசாட்சி செய்பவர்கள் பிர்அவ்னின் வரலாற்றிலிருந்து பாடம் பெற்றுக்கொள்ளவில்லை என்றால் இறைவனே அந்த பாடத்தை கற்றுக்கொடுப்பான்.அரபுலகம் இதை புரிந்து விழித்துக்கொள்ள வேண்டும்.

- கோம்பை நிஜாமுதீன்,
ஊடகத்துறை மாநில துணை ஒருங்கிணைப்பாளர்
இந்திய யூனியன் முஸ்லிம் லீக்
தமிழ்நாடு.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -