பாடசாலைகளின் குறைகளைத் தீர்க்க ஜனாதிபதி ஒத்துழைப்பு வழங்க வேண்டும்- வே.இராதாகிருஷ்ணன்

க.கிஷாந்தன்-

ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க ஆட்சி காலத்தில் தோட்ட பகுதி பாடசாலைகள் அரசாங்கத்திற்கு பொறுப்பேற்கபட்டது. அன்றைய காலம் தொட்டு இன்று வரை மலையக தமிழ் கல்வி பாடசாலைக்கு எதோ ஒரு வகையில் குறைபாடுகள் இருந்தே வருகின்றது. நல்லாட்சி அரசாங்கத்தின் கீழ் தற்போது உள்ள குறைபாடுகளை தீர்ப்பதற்கு ஜனாதிபதி அவர்கள் ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

அட்டன் ஹைலண்ஸ் கல்லூரியின் 125ஆவது ஆண்டு விழா 29.06.2017 அன்று அதிபர் ஆர்.ஸ்ரீதரன் தலைமையில் அட்டன் டீ.கே.டபிள்யூ மண்டபத்தில் இடம்பெற்றது.

இதில் கௌரவ அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றுகையில் மேற்கண்டவாறு கூறிய அவர் மேலும் தெரிவித்தாவது,

இலங்கையில் மத்திய மாகாணத்தில் நுவரெலியா மாவட்டத்தில் பிரபலமான பாடசாலை ஹைலண்ஸ் கல்லூரி. இக் கல்லூரி ஆரம்ப காலத்தில் கத்தோலிக்க திருச்சபையினால் உருவாக்கப்பட்டு இன்று 125 ஆண்டுகளை கடந்துள்ளது.

இங்கு இன்று இடம்பெறும் இந்நிகழ்வு டீ.கே.டபிள்யூ மண்டபத்தில் இடம்பெற்றாலும், அடுத்த ஆண்டு விழாவினை இக்கல்லூரியின் மண்டபத்தில் நடத்துவதற்கு மண்டப வசதிக்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படும்.

பல்வேறு வகையில் இக்கல்லூரியின் ஊடாக கல்விமான்கள் உருவாகியுள்ளனர். நான் மாகாண சபையில் கல்வி அமைச்சாராக இருந்த காலத்திலும் தற்பொழுது இராஜாங்க அமைச்சராக இருக்கின்ற காலத்திலும் இக்கல்விக்கான உதவிகளை தொடர்ந்தும் செய்து வருகின்றேன்.

மதிப்பிற்குரிய ஜனாதிபதி அவர்களே மலையகத்தின் தமிழ் கல்வி முன்னெடுப்புக்கு பாரிய குறைபாடுகள் காணப்படுகின்றது. ஆசிரியர் பற்றாக்குறை தீர்க்க முடியாத பிரச்சினையாக இருக்கின்றது. பட்டதாரி ஆசிரியர்களை பாடசாலைக்கு உள்வாங்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

மேலும் ஆசிரியர்களை தமிழ் பாடசாலைகளுக்கு உள்வாங்க நீங்கள் உதவிகளை செய்ய வேண்டும். ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க ஆடசி காலத்தில் அரசாங்கத்திற்கு பொறுப்பேற்ற மலையக தமிழ் பாடசாலைகள் பாரிய வளங்கள் குறைபாடு இருந்தது.

ஆசிரியர்களையும் அப்பாடசாலைக்களுக்கான வளங்களையும் அமரர்.சௌமிய மூர்த்தி தொண்டமான் பெற்றுக்கொடுத்தார். அவ்வாறு தொடர்ந்தும் செயல்பட்டு வருகின்ற இந்த பாடசாலைகளில் கல்வியில் சிறந்து விளங்குவதற்கான ஆசிரியர் வள குறைபாடு காணப்பட்டு வருகின்றது. இதனை நிவர்த்திக்க நல்லாட்சி அரசாங்கம் ஒத்துழைப்பும் உதவியும் தர வேண்டும்.


2016ம் ஆண்டு முதல் தமிழ் பாடசாலைகளுக்கு ஆசிரியர் பற்றாகுறை தொடர்பில் பல்வேறு கோரிக்கைகளை அரசாங்கத்திடம் முன்வைத்து வருகின்றோம் இதனை ஜனாதிபதி அவர்கள் தலையிட்டு தீர்வினை கண்டு தரும்படி இச்சந்தர்ப்பத்தில் கேட்டுக்கொள்வதாக அமைச்சர் இராதாகிருஷ்ணன் மேலும் தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -