ஞானசாரதேரர் போலவே தமிழ்- முஸ்லிம் அமைச்சர்கள் உள்ளனர் - சம்­பிக்க ரண­வக்க

பொது­ப­ல­சே­னாவின் ஞான­சா­ர­தேரர் மாத்­தி­ர­மல்ல, அவ­ரைப்போல் முஸ்லிம், தமிழ் அமைச்­சர்­களும் எம்­பிக்­களும் வெறுப்­பு­ணர்வைத் தூண்டும் பேச்­சுக்­களை பேசு­கி­றார்கள்.

இது தொடர்­பாக விசா­ரணை நடத்தி சம்­பந்­தப்­பட்­ட­வர்­க­ளுக்கு எதி­ராக உட­ன­டி­யாக சட்ட நட­வ­டிக்கை எடுக்­கப்­பட வேண்டும் என பாரிய நகரம் மற்றும் மேற்குப் பிராந்­திய அபி­வி­ருத்தி அமைச்­சரும் ஜாதிக ஹெல உறும­யவின் செய­லா­ள­ரு­மான சம்­பிக்க ரண­வக்க தெரி­வித்தார். 

பத்­த­ர­முல்­லை­யி­லுள்ள ஜாதிக ஹெல உறு­ம­யவின் அலு­வ­லகத்தில் நேற்று மதியம் நடை­பெற்ற ஊடக மாநாட்டில் கலந்து கொண்டு
உரை­யாற்­று­கை­யிலே அவர் இவ்­வாறு கூறினார். 

அவர் தொடர்ந்தும் உரை­யாற்­று­கையில்;
முஸ்­லிம்­களின் வர்த்­தக நிலை­யங்கள், பள்­ளி­வா­சல்கள் தாக்­குதல் தொடர்­பான சந்­தே­கத்தின் பேரில் பொலிஸார் சிலரை கைது செய்­துள்­ளார்கள். என்­றாலும் பொலி­ஸாரின் முன்­னெ­டுப்­புகள் போதாது. அவர்கள் துரி­த­மாக செயற்­ப­ட­வேண்டும்.

எமது நாட்டில் ஜன­நா­ய­கத்­துக்கு சவால்­விடும் சில குழுக்கள் இயங்கி வரு­கின்­றன. இந்தக் குழுக்கள் உலகில் தீவி­ர­வாத குழுக்­க­ளுடன் சம்­பந்­தப்­பட்­ட­வை­க­ளாகும். 

இவ்­வா­றான குழுக்­களின் செயற்­பா­டுகள் தொடர்­வ­தற்கு இட­ம­ளிக்க முடி­யாது. நாட்டின் சட்­டத்தை மீறி செயல்­ப­டு­பவர்கள் அவர்கள் யாராக இருந்­தாலும் சட்டம் கடு­மை­யாக அமுல் நடத்­தப்­ப­ட­வேண்டும். 

முஸ்­லிம்கள் தமது கடைகள், பள்­ளி­வா­சல்­க­ளுக்கு எதி­ராக 25 சம்­ப­வங்கள் இடம்­பெற்­றுள்­ள­தாக கூறு­கி­றார்கள். இந்­துக்கள் கிழக்கில் 61 கோயில்கள் அழிக்­கப்­பட்­டுள்­ள­தாக கூறு­கி­றார்கள். கிறிஸ்­த­வர்கள் தங்கள் ஆல­யங்கள் அழிக்­கப்­பட்­டுள்­ளன என்­கி­றார்கள். பௌத்­தர்கள் தங்கள் தொல்­பொருள் பிர­தே­சங்கள் அப­க­ரிக்­கப்­பட்­டுள்­ள­தா­கவும் அழிக்­கப்­பட்­டுள்­ள­தா­கவும் முறை­யி­டு­கி­றார்கள்.

இச்­சம்­ப­வங்­களின் பின்­ன­ணி­யுடன் சம்­பந்­தப்­பட்­ட­வர்கள் இருக்க வேண்டும். பொலிஸார் இந்த சம்­ப­வங்­க­ளுடன் தொடர்­பு­பட்­ட­வர்­களை தரா­தரம் பாராது கைது செய்து சட்­டத்தின் முன் நிறுத்த வேண்டும். 

இலங்­கையில் மாத்­தி­ர­மல்ல உல­கெங்கும் இவ்­வா­றான சம்­ப­வங்கள் நடந்­தே­று­கின்­றன. ஜேர்­ம­னியில் 97 பள்­ளி­வா­சல்கள் தாக்­கப்­பட்­டுள்­ளன. இதே­போன்று இங்­கி­லாந்து, அவுஸ்­தி­ரே­லியா, அமெ­ரிக்­காவில் பள்­ளி­வா­சல்கள் தாக்­கப்­பட்­டுள்­ளன. பாகிஸ்தான், ஆப்­கா­னிஸ்தான், ஈராக்கில் கிறிஸ்­த­வர்கள் ஆயி­ரக்­க­ணக்கில் கொலை செய்­யப்­ப­டு­கி­றார்கள். ஷியா – சுன்னி கல­வ­ரத்தில் அநேகர் இறக்­கி­றார்கள்.

vivelli
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -