ஷவ்வால் மாதத்­திற்­கான தலைப் பிறையைத் தீர்மானிக்கும் மாநாடு நாளை

ஹிஜ்ரி 1438 - ஷவ்வால் மாதத்­திற்­கான தலைப் பிறையைத் தீர்­மா­னிக்கும் மாநாடு, நாளை சனிக்­கி­ழமை மாலை மஃரிப் தொழு­கையின் பின்னர், கொழும்பு பெரிய பள்­ளி­வா­சலில் இடம்­பெ­ற­வுள்­ளது. 

சனிக்­கி­ழமை மாலை மஃரிப் தொழுகை நேர­மா­கிய 6.29 மணி முதல், ஷவ்வால் மாதத்தின் தலைப் பிறையைப் பார்க்­கு­மாறும், நாட்டின் எப்­பா­கத்­தி­லா­வது தலைப்­பி­றையைக் கண்­ட­வர்கள் தகுந்த ஆதா­ரங்­க­ளுடன் உட­ன­டி­யாக நேரிலோ அல்­லது 011 5234044, 011 2432110, 077 7316415 ஆகிய தொலை­பேசி இலக்­கங்­களின் ஊடா­கவோ அல்­லது 011 2390783 என்ற (பெக்ஸ்) தொலை நகல் ஊடா­கவோ அறி­யத்­த­ரு­மாறும், சகலமுஸ்­லிம்­க­ளையும் கொழும்பு பெரிய பள்­ளி­வாசல் கேட்­டுக்­கொள்­கி­றது. 

இம்­மா­நாட்டில், உல­மாக்கள், கதீப்­மார்கள் உள்­ளிட்ட கொழும்பு பெரிய பள்­ளி­வாசல் மற்றும் அகில இலங்கை ஜம்இய்­யத்துல் உலமா பிறைக் குழுக்­களின் உறுப்­பி­னர்கள், முஸ்லிம் சமய கலா­சாரத் திணைக்­களம் மற்றும் இலங்கை ஷரீஆ கவுன்சில் பிர­தி­நி­திகள், ஜும்ஆப் பள்­ளி­வா­சல்கள், ஸாவி­யாக்கள், தக்­கி­யாக்கள் மற்றும் ஹனபி, மேமன் பள்ளிவாசல்களின் நிர்வாகிகள் ஆகியோர் கலந்துகொள்ளவுள்ளனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -