சட்டவிரோத முறையில் மணல் அகழ்வில் ஈடுபட்ட நான்கு பேர் கைது


அப்துல்சலாம் யாசீம்-

தி
ருகோணமலை-மஹதிவுல்வெவ குளத்துப்பகுதிக்குள் சட்ட விரோதமான முறையில் மணல் அகழ்வில் ஈடுபட்டு வந்த 04 உழவு இயந்திரத்துடன் நான்கு பேரை இன்று (22) பிற்பகல் 3.30மணியளவில் கைது செய்துள்ளனர்.

கெப்பித்திக்கொள்ளாவ விஷேட அதிரடிப்படையினரும் மொறவெவ பிரதேச வனப்பாதுகாப்பு உத்தியோகத்தர்களும் இணைந்து நடாத்திய சுற்றிவளைப்பிலேயே சட்ட விரோத மணல் அகழ்வில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்டதாகவும் தெரியவருகின்றது.

அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட இடத்தை விட்டு விட்டு குளத்துக்கு அருகில் காணப்பட்ட மணல்களை அகழ்ந்து கொண்டிருக்கும் போதே இவர்கள் கைது செய்யப்பட்டதாகவும் வனப்பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் தெரிவித்தனர்.

04 உழவு இயந்திரத்துடன் நான்கு பேரையும் திருகோணமலை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவுள்ளதாகவும் வனப்பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் தெரிவித்தனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -