காரணம் கடந்த காலங்களில் பல தடவைகள் கிண்ணியா போன்ற கிழக்கு பிரதேசங்களில் பிறை கண்டதாக அறிவிக்கப்பட்டால் கிழக்கு மக்களுக்கு பிறை என்றால் என்னவென்று தெரியாதவர்கள் என்ற மனோ நிலையிலேயே அவர்களிடம் அது பற்றி கேள்விகள் எழுப்பப்பட்டன.
பிறை கண்டதாக சொன்னால் தென்னை மரத்தின் மேலால் தெரிந்ததா? கூரைக்குள்ளால் தெரிந்ததா? பிறையின் அளவு என்ன போன்ற ஹதீதில் சொல்லப்படாத முட்டாள்தனமான கேள்விகள் கேட்டு கிழக்கு மக்கள் அவமானப்படுத்தப்பட்ட வரலாற்றை காண்கிறோம்.
இப்படியான பல நிகழ்வுகள் காரணமாக மக்கள் பிறை பார்ப்பதில் அவநம்பிக்கையில் உள்ளார்கள். நாம் பிறை கண்டு சொன்னால் பிறையை ஏற்பதை விடுத்து நம்மை முட்டாளாக்குவதில்தான் கொழும்பு தலைமைகள் இருக்கும் என்பதை புரிந்து பிறை பார்ப்பது தவிர்க்கப்பட்டுள்ளது என்பதே யதார்த்தமாகும்.
ஆகவே இனியும் உலமா சபை உள்நாட்டில் பிறை பார்க்கும் படி மக்களை சொல்லிக்கொண்டிராமல் உலக முஸ்லிம்களின் கிப்லா தலைமையான மக்காவின் பிறையை ஏற்பதே எதிர்கால பித்னாக்களை தவிர்ப்பதாக முடியும்.
இந்த வகையில் மக்கா பிறையை ஏற்று நாளை முஸ்லிம்கள் இலங்கையில் நோன்பை விடும்படி உலமா கட்சி கேட்டுக்கொள்வதுடன் சிலர் நோன்பு சிலர் பெருநாள் எடுப்பதும் பித்னாவாக இருக்கும் என்பதால் பெருநாளை நாளை மறுநாள் கொண்டாடும் படியும் இலங்கை முஸ்லிம்களை கேட்டுக்கொள்கிறது. இவ்வாறு நோன்பை விட்டு மறுநாள் பெருநாள் எடுப்பதற்கும் நபிவழியில் இடம் உண்டு என்பதையும் சுட்டிக்காட்டுகின்றோம்.
மௌலவி முபாறக் அப்துல் மஜீத்
தலைவர்
உலமா கட்சி
