முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகளை கண்டித்த அமெரிக்க துதுவர்!

எம்.வை.அமீர்-
லங்கையில் காலம்காலமாக சிங்கள மற்றும் தமிழ் சமூகங்களுடனும் அரசாங்கத்துடனும் இணைந்துவாழும் முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகளை கண்டிப்பதாகவும் சமூகங்களின் ஒற்றுமைக்காக புனித நோன்பு தினத்தில் பிராத்திப்பதாகவுன் இலங்கைக்கான அமெரிக்கத்தூதுவர் அதுல் கேசாப் தெரிவித்தார்.

இலங்கைக்கான அமெரிக்க தூதரகம் ஏற்பாடுசெய்திருந்த இப்தார் நிகழ்வு மட்டாக்களப்பு ஈஸ்ட் லக்கூன் ஹோட்டேலில் 2017-06-20 ஆம் திகதி இடம்பெற்றது. இந்நிகழ்வுக்கு தென்கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் எம்.எம்.எம்.நாஜீம் உள்ளிட்டகல்வியாளர்களும் வர்த்தகம் மற்றும் ஊடகத்துறையோடு சார்ந்தபலரும் பங்குகொண்டிருந்தனர்.

இங்கு தொடர்ந்து உரையாற்றிய அதுல் கேசாப், இனங்களுக்கு இடையேயான ஒற்றுமையின் ஊடாகவே நாட்டை அபிவிருத்தி செய்யமுடியும் என்றும் அமெரிக்கா, இலங்கையில் சமாதானத்துக்காகவும் அபிவிருத்திக்காகவும் கடந்தகாலங்களில் பல்வேறு வகையில் பொருளாதார மற்றும் இராஜதந்திர முறைகளில் உதவிவருவதாகவும் எதிர்க்காலத்திலும் இவ்வாறான செயற்பாடுகளில் அதிக கரிசனை செலுத்தும் என்றும் தெரிவித்தார்.

இப்தார் நிகழ்வில் மட்டக்களப்பு ஜும்ஆ பள்ளிவாசலின் பிரதம கதீப் அஷ்செய்க் நளீம் பலாஹி அவர்கள் மார்க்கச்சொற்பொழிவாற்றினார்.

நிகழ்வில் இலங்கைக்கான அமெரிக்க தூதரக உயர் அதிகாரிகளும் கலந்துகொண்டிருந்த அதேவேளை கிழக்குமாகாணத்தில் இடம்பெற்ற இந்நிகழ்வுக்கான நகர்வுகளை இலங்கைக்கான அமெரிக்க தூதரகத்தைச் சேர்ந்த ஏ.ஜெ.எம்.நௌசாத் மேற்கொண்டிருன்தது குறிப்பிடத்தக்கது.இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -