ஹைலண்ஸ் கல்லூரியின் 125 ஆண்டு விழா ஊடகவியலாளர் மாநாடு சட்டவிரோதமானது..!

நோட்டன் பிரிட்ஜ் நிருபர் மு.இராமச்சந்திரன்-
ட்டன் ஹைலண்ஸ் கல்லூரியின் 125 ஆவது ஆண்டு விழா தொடர்பில் கல்லூரி நிருவாகம் உரிய அனுமதியின்றி சட்டவிரோதமாக ஊடகவியலாளர் மாநாடொன்றை நடத்தியமைத் தொடர்பில் மத்திய மாகாண ஆளுநர் மற்றும் முதலமைச்சர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென தமிழ் முற்போக்குக் கூட்டணியின் மத்திய மாகாணசபை உறுப்பினர் முத்தையா ராமசாமி தெரிவித்தார். மத்திய மாகாணசபை அமர்வில் கலந்து கொண்டு பேசிய போதே இவ்வாறு அவர் தெரிவித்தார்.

20 ஆம் திகதி இடம் பெற்ற மத்திய மாகாணசபை அமர்வில் கலந்து கொண்டு பேசிய அவர் மேலும் கூறுகையில் :

நான் அட்டன் ஹைலண்ஸ் கல்லூரியின் 125 ஆவது ஆண்டு விழா அழைப்பிதழ் பற்றி பேசவில்லை . எனினும் இந்தப்பாடசாலையில் இடம் பெற்ற சட்டத்துக்கு முரணான விடயமொன்றைப் பற்றியே பேச விரும்புகின்றேன். அதாவது இலங்கையின் வரலாற்றில் நான் கேள்வி உற்றதுக்கேற்ப பாடசாலை ஒன்றின் ஓய்வு பெற்ற அதிபர் ஒருவரும் தற்போதைய அதிபர் ஒருவரும் பாடசாலையில் ஊடகவியலாளர் மாநாடொன்றை நடத்தியதாகும். பொதுவாக பாடசாலையில் இவ்வாறான ஊடகவியலாளர் மாநாடு இடம் பெறுமானால் வலயக்கல்விப்பணிப்பாளர் அல்லது அவருக்கும் மேலான அதிகாரிகளின் அனுமதியுடனேயே இடம் பெறவேண்டும். அனால் இவ்வாறு இடம் பெறவில்லை. 

இந்த ஊடகவியலாளர் மாநாட்டில் பேசப்பட்ட விடயங்கள் இலங்கையின் தமிழ் சிங்கள தேசிய பத்திரிகைகளில் செய்திகள் வந்துள்ளன. இந்தச் செய்தியின் படி இந்தக்கல்லூரியின் முன்னாள் அதிபர் அமைச்சர் திகாம்பரம் குறிப்பிட்ட நிகழ்வில் கலந்து கொள்ள மாட்டார் என்று அறிவித்துள்ளார். அத்துடன் இந்த ஊடகவியலாளர் மாநாட்டில் அட்டன் சீடா நிறுவனத்தின் உத்தியோகஸ்தர் ஒருவரும் இலங்கை கல்வி வெளியீட்டுத் திணைக்களத்தின் பிரதி ஆணையாளர் ஒருவரும் அரசாங்க உத்தியோகஸ்தர்களாக பங்கு பற்றியுள்ளனர்.எனவே முறையான அனுமதி பெறாமல் ஊடகவியலாளர் மாநாடொன்றை நடத்திய இந்த அரசாங்க உத்தியோகஸ்தர்கள் தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கின்றேன். அத்துடன் கல்லூரியின் காலோலைகளில் முன்னாள் அதிபர் கையொப்பமிடுவதானது சட்டவிரோதமானது. என்று தெரிவித்தார்.

இதற்கு பதிலளித்த மத்திய மாகாணசபை முதலமைச்சர் சரத்ஏக்கநாயக்க இந்தக்குற்றச்சாட்டு பாராதூரமானது. இவ்விடயம் தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்கப்படுமென்று தெரிவித்தார். இந்த நிலையில் மத்திய மாகாணசபையின் கல்வியமைச்சுக்குக் கீழ் செயற்படுகின்ற அட்டன் ஹைலண்ஸ் கல்லூரியின் 125 ஆவது பரிசளிப்பு விழாவில் ஜனாதிபதி கலந்து கொள்ளவுள்ள நிலையில் நுவரெலியா மாவட்டத்தின் அமைச்சரவை அந்தஸ்து உள்ள அமைச்சரான பழனி திகாம்பரத்தின் பெயர் அழைப்பிதழ் நிரலில் உள்ளடக்கப்படவில்லை. இதனை எவ்விதத்திலும் ஏற்றுக்கொள்ள முடியாது. இவ்விடயம் தொடர்பில் முதலமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இதற்கு பதிலளித்த முதலமைச்சர் இவ்விடயம் தொடர்பில் உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -