கல்குடா அஹ்லுல் பைத் ஜமாத்தின் (ஷியா பிரிவின்) உணர்ச்சி பூர்வமான




ஓட்டமாவடி அஹமட் இர்ஷாட்-

1967ம் ஆண்டு நடை பெற்ற அறபு இஸ்ரேல் யுத்தத்தினை தொடர்ந்து பைத்துல் முகத்தஸ் இஸ்ரேலின் வசமானது. பைத்துல் முகத்தஸ் பறிபோய் 50 வருடங்கள் ஆகிவிட்டன. உலகில் 65 முஸ்லிம் நாடுகள் 160 கோடிக்கு மேல் முஸ்லிம்கள் இருந்தும் பைத்துல் முகத்தஸ் மஸ்ஜித்தினை மீட்டெடுக்க முடியாத நிலையை எண்ணி வெட்கப்பட வேண்டியுள்ளது., கவலைப்பட வேண்டியுள்ளது.

இவ்வாறு நேற்று 23.06.2017 வெள்ளிக்கிழமை கல்குடா அஹ்லுல் பைத் ஜமாத்தினரின் ஏற்பாட்டில் (ஷியா பிரிவினர்) மீராவோடை ஆலிம் வீதியில் உள்ள இஸ்லமிய கல்வி கலாச்சார நிலையத்தில் இடம் பெற்ற இஸ்லாமிய உம்மத்தின் ஒற்றுமையும் மஸ்ஜிதுல் அக்ஸாவின் விடுதலையும் எனும் தலைப்பில் 2017 ஆண்டுக்குகான இஃப்தாருடன் இடம் பெற்ற சர்வதேச குத்ஸ் தின நிகழ்வானது மேற்கண்டவாறு உணர்ச்சி பூர்வமாக இடம் பெற்றதினை அவதானிக்க கூடியதாக இருந்தது.

கிழக்கு மாகாணத்தில் கல்குடா பிரதேசமானது அஹ்லுல் பைத் ஜமாத்தின் (ஷியா பிரிவின்) முக்கிய தளமாக இருக்கின்ற அதே நேரத்தில் கல்குடா பிரதேசத்தில் உள்ள அனேகமான அஹ்லும் பைத் ஜமாத்தின் உறுப்பினர்களும், பெண்களும் குறித்த குத்ஸ் தின நிகழ்வில் கலந்து கொண்டமையும் முக்கிய விடமாகும். இமாம் ஜெளபர் சாதிக் நற்பணி மன்றத்தின் தலைவர் ஹலீம் மெளலவி, மீராவோடை மன்பஹுல் ஹுதா அறபு கலாசாலையின் தேசிய பாடப்பிறிவு ஆசிரியர் அப்துலாஹ் ஆகியோர்கள் சொற்பொழிவாற்றியதுடன் அல்-முஸ்தபா சர்வதேச பல்கலை கழகத்தின் சிரேஸ்ட்ட விரிவுரையாளர் மொஹம்மட் மர்வானினால் மஸ்ஜிதுல் அக்ஸாவினை ஞாபக மூட்டுவதான கவிதையும் வாசிக்கப்பட்டது.

மேலும் துவா பிரார்த்தனையுடன் நிறைவு பெற்ற குறித்த குத்ஸ் தின நிகழ்வின் காணொளி எமது இணைய நாளிதழ் வாசகர்களுக்காக இங்கே பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -