திருகோணமலை தலைமை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட திருகோணமலை நகர் பிரதேசத்தில் 2கிலோ 150கிராம் கேரளா கஞ்சாவுடன் 37 மற்றும் 42 வயதுடைய இருவர் இன்று திருகோணமலை பிராந்திய விஷத்தன்மை போதை பொருள் ஒழிப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டர்கள்.
கைது செய்யப்பட்டவர்கள் கேரளா கஞ்சாவை விற்பனைக்காக கிண்ணியா பெரதேசத்தில் மொத்தமாக கொள்முதல்செய்து அதனை திருகோணமலை நகரில் சில்லறையாக விற்கும் நோக்கத்துடன் கிண்ணியாவில் இருந்து திருகோணமலைக்கு கொண்டுசெல்லும் வழியியே கைதுசெய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்டவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தும் நோக்கத்துடன் தலைமை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டார்கள்

