அமெரிக்கா விசாவுக்கு இனி பேஸ்புக் கணக்கு அவசியம்.!

எஸ்.ஹமீத் -
ர்ச்சைகளுக்குப் பெயர் போன அமெரிக்கா ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் வெளிநாட்டு ஊழியர்கள் அமெரிக்காவுக்கு வருவதை கட்டுபடுத்த எச்1பி விசாவில் புதிய விதிமுறைகளை கொண்டு வந்தார். மேலும் ஏழு முஸ்லீம் நாடுகளுக்கான விசாவை இரத்துச் செய்து கட்டளை பிறப்பித்தார்.

தற்போது தீவிரவாதிகள் அமெரிக்காவுக்குள் ஊடுருவுவதைத் தடுக்க வெளிநாட்டினருக்கு வழங்கப்படும் விசாவில் புதிய கட்டுப்பாடுகளை கொண்டுவர உத்தரவிட்டுள்ளார்.

இனி, அமெரிக்கா விசாவுக்கான விண்ணப்பத்தில் விண்ணப்பதாரிகள் தாங்கள் கடந்த ஐந்து ஆண்டுகளாக பயன்படுத்திவரும் பேஸ்புக், டிவிட்டர், இ-மெயில், தொலைபேசி எண் ஆகியவற்றையும் குறிப்பிட வேண்டும் என டிரம்ப் உத்தரவிட்டுள்ளார்.

இதன் மூலம் விசா விண்ணப்பதாரர்கள் தீவிரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனரா என அறிய முடியும் என அமெரிக்க குடியுரிமை துறை அதிகாரிகள் நம்புவதாகத் தெரிகிறது.

தீவிரவாதிகளென்ன சொந்த ஐடியிலேயா பேஸ்புக், ட்வீட்டர் கணக்கு வைத்திருக்கிறார்கள்...? என்று பலரும் கேட்பது ட்ரம்பின் காதுகளில் விழுமோ, தெரியவில்லை.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -