கழிவு முகாமைத்துவம் செய்வதில் உள்ளூராட்சி மன்றங்கள் எதிர்கொண்டுள்ள சிக்கல்கள் தொடர்பில் இன்று விசேட கலந்துரையாடல் ஒன்று ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தலைமையில் இடம்பெற்றது.
இன்று காலை ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற இந்த கூட்டத்தில் நாட்டின் அனைத்து உள்ளூராட்சி மன்ற ஆணையாளர்கள் மற்றும் அரசாங்க அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
கழிவு முகாமைத்துவம் செய்வதில் உள்ளூராட்சிமன்றங்கள் எதிர்கொண்டுள்ள சிக்கல்கள், அவற்றுக்கான தீர்வுகள் மற்றும் எதிர்கால நடவடிக்கைகள் தொடர்பாக இதன்போது கலந்துரையாடப்பட்டது.
பிரதமர் ரணில் விக்ரமசிங்க, முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க, அமைச்சர்களான அனுரா பிரியதர்ஷன யப்பா,வஜிர அபேவர்தன, சஜித் பிரேமதாச, சம்பிக்க ரணவக்க, சாகல ரத்நாயக்க, பைசர் முஸ்தபா, மேல்மாகாண முதலைச்சர் இசுர தேவப்பிரிய, பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். மரிக்கார் ஆகியோரும் இராணுவ தளபதி, பொலிஸ்மா அதிபர் உள்ளிட்ட பாதுகாப்பு பிரிவு பிரதானிகள் இக்கூட்டத்தில் கலந்துகொண்டனர்.