அண்மையில் அரச தேசிய பாடசாலைகளுக்கு அதிபரை நியமித்தல் இடமாற்றம் செய்தல் உட்பட குறித்த பாடசாலையுடன் தொடர்புடைய 10 நடவடிக்கைகளை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் கல்வி அமைச்சர் தனது நேரடிக் கட்டுப்பாட்டில் எடுத்துள்ளார்.
என்ற அறிவிப்பு கல்வி அமைச்சில் இருந்து வெளிவந்தது.
இவ்வாறான அறிவிப்பை வெளியிட கிண்ணியா மத்திய கல்லூரியில் நிலவும் புதிய அதிபர் நியமனத்துக்கான இழுபறி நிலையும் ஒரு காரணம் என தெரிவிக்கப்படுகிறது. கடந்த சில மாதங்களாக கிண்ணியா மத்திய கல்லூரியில் அதிபர் வெற்றிடம் நிலவுகிறது. சுற்றறிக்கையின் படி தேசிய பாடசாலைக்கு அதிபராக அதிபர் சேவையில் தரம் I இல் உள்ள ஒருவர் அல்லது SLEAS தரத்தில் உள்ள ஒருவரே நியமிக்கப்பட வேண்டும்.
ஆனாலும் சில நாட்களுக்கு முன் இப்பாடசாலைக்கு அதிபர் சேவை தரம் III இல் உள்ள ஒருவரை கல்வி அமைச்சருக்கு தெரியாமல் நியமிக்க அப்பகுதி பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் முயற்சித்து, அவ்வதிபர் நியமனம் கடிதம் பெற காத்திருந்த இறுதி தருணத்தில் கல்வி அமைச்சரின் கவனத்துக்கு இது கொண்டுவரப்பட்டதை அடுத்து உடனடியாக அந்நியமனம் கல்வி அமைச்சரால் இடைநிறுத்தப்பட்டிருந்தது.
இதைத் தொடர்ந்தே கல்வி அமைச்சரினால் அவ்வறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது. தற்போது கிண்ணியா மத்திய கல்லூரி அதிபர் நியமனம் கல்வி அமைச்சரின் நேரடி கண்காணிப்பின் கீழ் உள்ளது.இன்னும் சில தினங்களில் இப்பாடசாலைக்கு பொருத்தமான அதிபர் நியமிக்கப்படுவர் என உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன.