இம்போட்மிரருக்கு அமைச்சர் றிசாத்திடம் இருந்து வந்த செய்தி..!

7வது அகவையில் கால் பதிக்கும் இம்போர்ட்மிரர் வலையத்தளத்துக்கு உளப்பூர்வமான எனது வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவிக்கின்றேன். 

ஊடக பரிணாம வளர்ச்சியில் சமூக வலைத்தளங்கள் இன்று பிரதான பங்கினை வகித்து வருகின்றன. அந்த வகையில் இம்போர்ட்மிரர் குறிப்பிட்ட காலத்தில் ஊடகத்துறையில் கணிசமான பங்களிப்பை நல்கி வருகின்றது. அதுமட்டுமன்றி அரசியல், சமூக, கலாசார விடயங்களுக்கு முன்னுரிமையளித்து நடுநிலையான, பக்கச்சார்பற்ற செய்திகளை வழங்கி வருகின்றமை போற்றத்தக்கதாகும். 

முஸ்லிம்களுக்கு தனியான ஊடகம் தேவையென்ற நிர்ப்பந்தம் ஏற்பட்டிருக்கும் தற்போதைய காலகட்டத்தில் முஸ்லிம் சமூகத்தின் அபிலாசைகளை வெளிக்கொணர்வதற்கும், சமூகப்பிரச்சினைகளை வெளிக்கொணர்ந்து தீர்வை பெற்றுக்கொள்வதற்கும் வடிகானாக சமூக வலைத்தளங்கள் ஓரளவு செயற்படுகின்றன. இந்த வகையில் இற்றைவரை ஆற்றிய பங்களிப்பைப் போன்று தொடர்ந்தும் இம்போர்ட்மிரர் வலைத்தளமும்; இந்தப்பணியை மேலும் செவ்வனே முன்னெடுக்குமென பெரிதும் நம்புகின்றேன். 
இம்போர்ட்மிரரின் பணி சிறக்க எனது நல் வாழ்ததுக்கள். 
றிஷாட் பதியுதீன்,
தலைவர் - அகில இலங்கை மக்கள் காங்கிரஸ்,
கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -