ஹட்டன் பஸ் தரிப்பு நிலையத்தில் ஆணின் சடலம் மீட்பு..!

க.கிஷாந்தன்-
லங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான ஹட்டன் பஸ் தரிப்பு நிலையத்தில் 08.04.2017 அன்று காலை மீட்கப்பட்ட ஆணின் சடலம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் நபர் ஒருவர் ஹட்டன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

மேற்படி உயிரிழந்த நபர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு உயிரிழந்துள்ளார் என்ற சந்தேகம் கொண்ட பொலிஸார் சம்பவம் தொடர்பில் குறித்த நபர் ஒருவரை கைது செய்துள்ளனர்.

இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் ஹட்டன் அலுத்கம பகுதியை சேர்ந்த பொண்ணுசாமி கணேஷன் (வயது 47) மூன்று பிள்ளைகளின் தந்தை என ஹட்டன் பொலிஸாரால் அடையாளம் காணப்பட்டது.

முகம் மற்றும் உடற்பாகங்களில் காயங்களுடன் மீட்கப்பட்டுள்ள உயிரிழந்தவர் ஹட்டன் நகரின் பொதி சுமக்கும் தொழில் ஈடுப்பட்டவர் என ஆரம்பகட்ட பொலிஸ் விசாரணையில் தெரியவந்தது.

குறித்த உயிரிழந்த நபர், கைது செய்யப்பட்ட சந்தேக நபருடன் 07.04.2017 அன்று இரவு ஹட்டன் நகரத்தில் வாய் தர்க்கத்தில் ஈடுப்பட்டதாகவும், அதன் பிறகு ஆயுதத்தால் தாக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடம் விசாரணைகளை மேற்கொண்ட பின் ஹட்டன் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் அட்டன் காமினிபுர பகுதியை சேர்ந்தவர் என பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -