புத்தாண்டை நாம் கறுப்புஆடை நிறமணிந்து சோக தினமாக துக்கதினமாக அனுஸ்ட்டிக்கின்றோம்.. இன்னமும் இப்படியொரு நிலை யாருக்கும் வரக்கூடாதும்.இவ்வாறு காரைதீவு விபுலானந்த சதுக்கமருகே கூடாரமிட்டு 47ஆவது தினமாக சத்தியாக்கிரப்பேராட்டத்திலீடுபட்டுவரும் அம்பாறை மாவட்ட வேலையில்லாப் பட்டதாரிகள் கூறினர்.
அவர்களின் சத்தியாக்கிரகப்போராட்டம் நேற்றுவெள்ளகிழமை 47வது தினமாகத் தொடர்ந்தது.
அவர்கள் மேலும் கருத்துரைக்கையில்:
இதுவரை புத்தாடைகளுக்கு பெற்றோரிடம் தங்கியிருந்தோம்.ஆனால் இனி அவ்விதம் செய்யமாட்டோம். எமதுவருமானத்தில்தான் எதனையும்செய்வோம்.அதுவரை காத்திருப்போம். அதற்காக எத்தகைய தியாகத்தையும் செய்யத்தயாராயிருக்கின்றோம்.என்றார்.
நேற்றும் பட்டதாரிகள் கூ டுதலான எண்ணிக்கையினர் கலந்துகொண்டிருந்தனர்.அவர்களத பிள்ளைகளும் கலந்துகொண்டனர்.அவர்கள் கறுப்புநிற ஆடை அணிந்து கறுப்புறிநக்கொடிகளை ஏந்தியவண்ணம் காணப்படனர்.
அம்பாறை மாவட்டத்தின் வேலையில்லா சிங்களப்பட்டதாரிகள் புதுவருடப்பிறப்பின்பின்னர் காரைதீவில் கடந்த 45தினங்களாக சத்தியாக்கிரகப்போராட்டத்திலீடுபட்டுவரும் தமிழ்பேசும் பட்டதாரிகளோடு இணையவுள்ளதாக பட்டதாரியொருவர் தெரிவித்தார்.