ஹஸ்பர் ஏ ஹலீம்-
திருகோணமலை மாவட்டம் கிண்ணியா பிரதேச செயலகப்பிரிவுக்குட்பட்ட துவரங்குளப்பகுதியின் ஒரு குடும்பத்தின் சோக நிலை
கிட்டத்தட்ட 80000 முஸ்லீம்கள் வாழும் எமதூர் கிண்ணியாவில் இப்படியுமொறு குடும்பம் வாழ்கிறது!
கிண்ணியா துவரங்குளம் பள்ளிக்கருகில் 6 பிள்ளைகளுடன் அஷ்ரப் என்பவரின் குடும்பம் வாழ்ந்து வருகிறது. இரண்டு அங்கவீனமுற்ற பிள்ளைகள் உற்பட இக்குடும்பம் மிக பரிதாபகரமான நிலையில் உள்ளது. ஒரு சிறிய குடிசைக்குள் அனைவறும் அக்குடிசைக்குள் உறங்க கூட இடமில்லை வாழ்ந்து வருவதுடன் இன்று பல இஸ்லாமிய அமைப்புகள், ஸகாத் நிதியம், அரசியல் தலமைகள் உதவி செய்கின்ற போதும் இவர்கள் கண்ணுக்கு படாமலிருப்பது மேலும் கவலையளிக்கிறது.
இக்குடும்பத்துக்கு வீடு அமைக்க உதவுவோர் உதவ முன்வாருங்கள் நேரடி விஜயம் செய்து தகவல்களை உறுதிப்படுத்தலாம்