ஏறாவூர் நகர இளைஞர் கழகங்களுக்கிடையிலான இளைஞர் விளையாட்டுப்போட்டிகள் அடுத்த வாரம் ஆரம்பிக்கப்படவுள்ளதாக ஏறாவூர் இளைஞர் கழக சம்மேளத்தின் தலைவர் வீ.டி.கபூர் தெரிவித்தார்.
கடந்த வெள்ளிக்கிழமை (21.04.2017) ஏறாவூர் வாவிக்கரை கலாசார மனண்டபத்தில் நடைபெற்ற ஏறாவூர் இளைஞர் சம்மேளத்தின் இவ் வருட இளைஞர் விளையாட்டு விழா சம்பந்தமான கலந்துரையாடலின் போதே இவ் முடிவு செய்யப்பட்டதாக அவர் மேலும் தெரிவித்தார்.
ஏறாவூர் இளைஞர் சேவை உத்தியோகத்தர் யு.எல்.ஹனிபாவின் வழிகாட்டலில் நடைபெறவுள்ள இப்போட்டிகளில் அனைத்து இளைஞர் கழகங்களும் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறும் போட்டிகள் அனைத்தினையும் மிகச் சிறப்பாக நடாத்தி முடிப்பதற்கு உதவி புரியுமாறும் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளதாகவும் அனைத்து ஏறாவூர் இளைஞர் கழகங்களின் ஒத்துழைப்பு பாரிய வெற்றிக்கு வழிவகுக்கும் என்றும் இக்கலந்துரையாடலில் முடிவு செய்யப்பட்டமை இங்கு குறிப்பிடத்தக்கது.
செய்தி
ஆக்கில் முஹம்மட்
ஏறாவூர் விடிவெள்ளி மேலதிக நிருபர்
0757450537