சப்னி அஹமட்-
மாகாண சுகாதார அமைச்சர்களுக்கான மாநாடு நேற்று (27) சுகாதார அமைச்சர் ராஜித சேனரத்ன தலைமையில் கொழும்பில் உள்ள இரத்த வங்கி தலைமையகத்தில் ஆரம்பமானது.
இதன் போது, மாகாணங்களில் உள்ள சுகாதார பிரச்சினைகள் தொடர்பாகவும், கடந்த மாநாட்டில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பாகவும், சுகாதார அமைச்சரினாலும், சுகாதார சேவைகள் பணிப்பாளரினாலும் ஆராய்யப்பட்டு மாகாண ரீதியாக ஒவ்வொரு அமைச்சர்கள் ஊடாகவும் பிரச்சினைகள் தொடர்பாகவும் சுட்டிக்காட்டப்பட்டது.
அங்கு உரையாற்றிய கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர்;
கிழக்கு மாகாண சுகாதாரத்துறையில் காணப்படும் அனைத்துக் குறைபாடுகளையும் முடிந்தவரை சுகாதார அமைச்சர் நிவர்த்தி செய்துதர வேண்டும் என்று வேண்டிக் கொள்வதுடன் கிழக்கு மாகாணத்தில் காணப்படுகின்ற வைத்தியசாலைகளுக்கு நூற்றுக்கு மேற்பட்ட வைத்தியர்கள் போதாமையுள்ளதுடன் அதனை நிவர்த்தி தருமாரும், தாதியர்கள், பொது சுகாதார பரிசோதகர்களும், அவர்களுக்கான வாகன வசதிகள் போதாமைகள், அம்பியுலன்ஸ், போன்ற பலதேவைகளை சுட்டிக்காட்டினார்.