நோட்டன் பிரிட்ஜ் நிருபர் மு.இராமச்சந்திரன்-
தமிழ் சிங்கள் சித்திரை புத்தாண்டை முன்னிட்டு அட்டன் நகர் கலைக்கட்டியுள்ளது. 2017 ம் ஆண்டு துர்முகி வருடம் ஏப்ரல் 14 ம் திகதி ஆரம்பமாகவுள்ள சித்திரை புத்தாண்டை வரவேற்க மலையக மக்கள்தயாராகிவருகின்றனர். அட்டன் நகருக்கு வரும் மக்கள் புத்தாடைகள் உட்பட வழிப்பாட்டு பொருட்கள். இனிப்புபண்டங்கள் போன்ற கொள்ளவனவு செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.
கொழும்பு மற்றும் புறநகர் பகுதியிலிருந்து மலையகத்திற்கு வருகைத்தருவோறின் நலன் கருதி இலங்கை போக்குவத்து பஸ் மற்றும் தனியார் பஸ் விசேட போக்குவத்து சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதுடன் மலையகத்துக்கான விசேட ரயில் சேவையும் ஈடுபடுத்தப்பட்டுள்ளது.
மேலும் நகருக்கு வருவோருக்கு பாதுகாப்பு வழங்கும் வகையில் பொலிஸ் பாதுகாப்பும் வழங்கப்பட்டுள்ளது.