யாழ்ப்பாணத்தில் தேசிய மீலாத் விழா - ஹலீம், றிஷாத்திடம் வலியுறுத்தல்

பாறுக் ஷிஹான்-
யாழ்ப்பாணத்தில் இவ்வருடத்திற்கான மீலாத் விழா பணிகளை டாக்டர் ரம்ஸி தலைமையிலான மீலாத் விழா குழு மேற்கொண்டுள்ளது. இதற்கமைய முஸ்லிம் சமய விவகார அமைச்சில், அதற்கான அமைச்சர் ஹலீமை 20.12.2016 அன்று சந்தித்து யாழ்ப்பாணத்தில் தேசிய மீலாத் விழாவை நடாத்த வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினர். அதற்கான நியாயபூர்வமான காரணங்களையும் பட்டியல்படுத்தினர்.

தேசிய மீலாத் விழாவை யாழ்ப்பாணத்தில் நடத்துமாறு முதன்முதலாக அமைச்சர் ஹலீமை நேரடியாக சந்தித்து, வலியுறுத்தியது டாக்டர் ரம்ஸி தலைமையிலான தரப்பினரே ஆகும். இதனை அமைச்சர் ஹலீமின் பிரத்தியேகச் செயலாளரும், அந்த சந்திப்பை ஏற்பாடு செய்தவருமான பாஹிம் உறுதிப்படுத்தியும் இருந்தார்.

அதேவேளை சமகாலத்தில் அமைச்சர் றிசாத் பதியுதீனும் அமைச்சர் ஹலீமிடம் யாழ்ப்பாணத்தில் தேசிய மீலாத் விழாவை நடாத்துமாறு வலியுறுத்தியிருந்தார்.

இந்நிலையில் யாழ்ப்பாண தேசிய மீலாத் விழா குழுவானது தகைமையுள்ள, தொழிசார் வல்லமையுடைய மற்றும் யாழ்ப்பாணத்திலும், அதற்கு வெளியேயும் கரங்கள் தூய்மையுடையவர்கள் என அடையாளம் கண்டவர்களை உள்வாங்கி ஒரு குழுவாக செயற்பட்டு, மீலாத் விழா ஏற்பாட்டு பணிகளை தீவிரமாக முன்னெடுத்து வருகிறது.

எதிர்வரும் நாட்களில் இதுதொடர்பிலான பல முக்கிய சந்திப்புகளை கொழும்பிலும், யாழ்ப்பாணத்திலும் மேற்கொள்ளவுள்ளது.

யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ள தேசிய மீலாத் விழா மூலம், தமது தாயகப் பிரதேசத்தை மேலும் மெருகூட்டும் நோக்குடன் செயற்படும் இந்த மீலாத் விழா குழுவானது யாழ்ப்பாணத்திலும், அதற்கு வெளியேயும் வாழும் யாழ்ப்பாண முஸ்லிம்களின் பூரண ஆதரவையும் பெற்று செயற்பட்டுவருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -