முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் புதிய பணிப்பாளராக அஷ்ஷெய்க் அப்துல் மலிக் (நளீமி) இன்று (27) மாலை தனது கடமையைப் பொறுப்பேற்றுக் கொண்டார்.
இவர் நிருவாக சேவையில் முதல்தர வகப்பில் இருப்பதுடன் புத்தளம் முந்தல் பிரதேசச் செயலகத்தின் பிரதேசச் செயலாளரர் உள்ளிட்ட பல நிறுவனங்களில் அதி உயர் பதவிகளில் இருந்து இறுதியாக பப்ளிக் சேவிஸ் கொமிசனில் பணிப்பாளராக கடமையாற்றி தற்போது முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் புதிய பணிப்பாளராக கடமையைப் பொறுப்பேற்றுள்ளார்.
பதவியேற்றபோது தான் இத்திணைக்களத்தினை சிறந்த ஒரு திணைக்களமாகவும், இருக்கும் வளங்களை சிறப்பாகப் பயன்படுத்தி சமுகத்திற்கும் நாட்டிற்கும் முன்மாதிரியான ஒரு திணைக்களமாக மாற்றுவதற்கு நினைத்திருப்பதாகவும் இந்த விடயத்திற்கு திணைக்களத்தின் சகல அலுவலர்களும் தன்னுடன் இணைந்து ஒத்துழைப்பு நல்கும் பட்சத்தில் தமது கனவை நிறைவேற்ற முடியும் எனக் குறிப்பிட்டார்.