சப்னி அஹமட்-
அட்டாளைச்சேனை தேசிய பாடசாலைக்கு கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல். முஹம்மட் நஸீரின் சொந்த நிதியிலிருந்து கண்கானிப்பு கமெரா வழங்கி வைக்கும் நிகழ்வு இன்று (24) காலை பாடசாலையின் அதிபர் தலைமையில் இடம்பெற்றது. பாடசாலையின் நீண்ட நாள் தேவையாக இருந்த குறித்த கமெராவை கிழக்கு மாகாண சுகாதார அமைச்சரின் பாடசாலைச்சமூகம் கேட்டுக்கொண்டதற்கு இனங்க கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் தனது சொந்த நிதியிலிருந்து பெற்றுக்கொடுத்தார்.
இதன் போது, அகில இலங்கைரீதியில் இடம்பெற்ற பேச்சுப்போட்டியில் கலந்துகொண்ட மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கி வைக்கப்பட்டதுடன், பாடசாலையின் புதிதியா நிர்மானிக்கப்பட்டுவரும் கட்டிட வேலைத்திட்டங்களை பார்வையிட்டார். இந்நிகழ்வில், பாடசாலையின் அதிபர், பிரதி அதிபர், ஆசிரியர்கள் உள்ளிட்டவர்களுடன் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சரின் மக்கள் தொடர்பாடல் அதிகாரி நயீம் உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டனர்.