அக்கரைப்பற்று- கல்முனையில் இருந்து கொழும்பு செல்லும் அதி சொகுசு பயணிகள் போக்குவரத்து அல்-ராஷித் பஸ் மீது சில வாரங்களாக கல் வீச்சு சம்பவம் இடம்பெற்று வருகின்றன.
குறித்த பஸ்ஸின் மீது கல்லெறிந்து நஷ்டப்படுத்துவோர் யார் என்பது குறித்து பல நாட்களாக தேடும்பணிகள் இடம்பெற்று வந்தன.
ஒரு சில நாட்கள் சிசிடிவி கமராக்களிலும் அகப்பட்டன. அத்துடன் பொலிசார் குறித்த நபர்களைத் தேடும்பணியில் இருந்தவேளை கடந்த சில நாட்களுக்கு முதல் அக்கரைப்பற்றில் இருந்து இரவு 8.30 மணியளவில் கல்முனை வீதியூடாக பஸ் வண்டி பயணிக்கையில் காரைதீவு எல்லையில் வைத்து கல்லெறி விழுந்தது.
கல்லெறியும் மர்ம நபரை எதிர்பார்த்து பஸ்ஸிக்குப் பின்னால் சென்ற இரண்டு மோட்டார் சைக்கிலில் சென்ற இளைஞர்கள் உடனடியாக சைக்கிலை விட்டுப்பாய்ந்து சென்று மர்ம நபரை மடக்கிப் பிடித்து சம்மாந்துறைப் பொலிசாரிடம் ஓப்படைத்தனர்.
குறித்த நபர் சாய்ந்தமருதைச் சேர்ந்தவர் என்றும் அவரை 14 நாள் விளக்கமறியலில் வைக்கவும் நீதவான் உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.