எம்.எம்.ஜபீர்-
நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிஸின் தலைவருமான ரவூப் ஹக்கீமின் வழிகாட்டலில் அம்பாரை மாவட்டத்தில் முதல்கட்டமாக ஒலுவில் பிரதேசத்தினை சேர்ந்த மூன்று இளைஞர்களுக்கு தேசிய சமூக நீர் வழங்கல் திணைக்களத்தின் ஊழியர்களுக்கான நியமனக் கடிதத்தினை நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சரின் இணைப்புச் செயலாளர் ரகுமத் மன்சூரினால் இன்று வெள்ளிக்கிழமை கல்முனை ரகுமத் மன்சூரின் அலுவகத்தில் வைத்து உத்தியோகபூர்வமாக வழங்கிவைக்கப்பட்டது. இதில் விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் எச்.எம்.எம்.ஹரீஸின் இணைப்பாளர் ஐ.எல்.ஹமீட் மற்றும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஒலுவில் மத்திய குழுவின் செயலாளர் ஏ.எல்.ஏ.கபூர் ஆகியோர்கள் கலந்துகொண்டனர்.


