உள்ளுராட்சி சபைகளுக்கு அதிகம் அதிகாரம் வழங்கப்பட வேண்டும் - சிராஜ் மஷ்ஹூர்

அப்துல்சலாம் யாசீம்-
ந்தியாவில் பஞ்சாயத்து சபைகளுக்கு அதிகாரம் உள்ளது போல இலங்கையிலும் உள்ளுராட்சி சபைகளுக்கு அதிகம் அதிகாரம் வழங்கப்பட வேண்டும் என தென் கிழக்கு பல்கலைக்கழக தமிழ்துறை விரிவுரையாளர் சிராஜ் மஷ்ஹூர் தெரிவித்தார்.

புதிய அரசியலமைப்பும் தேர்தல் முறை மாற்றமும் தொடர்பான கருத்தாடல் நிகழ்வு இன்று (13) ஹொரவ்பொத்தான பிரதேச சபை கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. அந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார்.

மேலும் அவர் உரையாற்றுகையில்;

சமகாலத்தில் அரசியலமைப்பு மாற்றம் தொடர்பாக பல விடயங்கள் பேசப்படுகின்றன. அதில் முக்கியமாக அதிகாரப்பகிர்வு விடயம் கவனத்தில் கொள்ளப்பட வேண்டும். மத்திய அரசாங்கத்தினுடைய அதிகாரங்கள் மாகாண அதிகாரங்கள் என்று தான் அதிகம் கவனம் செலுத்தப்படுகின்றது.ஆனாலும் மூன்றாவது மட்டமான உள்ளுராட்சி மன்றங்கள் அதிகம் கனவம் செலுத்து பார்க்கப்பட வேண்டும்.

உள்ளுராட்சி மன்றங்களின் ஊடாக செய்யப்படுகின்ற சேவைகள் தான் அதிகம் மக்களுக்கு நேரடியாக சென்றடைகின்றது. மாகாண அதிகாரம் என்று வருகின்ற போது பெரும்பான்மையினத்தவருக்கே அதிகளவில் 07 மாகாணங்கள் இருக்கின்றது.சிறுபான்மை சமூகத்தினரை பொறுத்தவரை குறிப்பாக வடக்கு கிழக்கு மாகாணத்தில் அந்த அதிகாரங்கள் இருக்கின்றது.

ஆனாலும் தென் இலங்கையில் வாழுகின்ற முஸ்லிம் மக்கள்.மலையக தமிழர்கள் இதில் அதிகளவில் பாதிப்புக்குள்ளாகின்றனர்.அவர்களுக்கு இந்த உள்ளுராட்சி மன்றங்களின் அதிகாரங்கள் அதிகாரப்பகிர்வு என்ற அம்ஷம் தான் மிகவும் பயன்மிக்கதாக அமையும்.அதேபோல சிறுபான்மை சமூகங்களை பாதுகாக்க கூடிய வகையிலே சிறுபான்மை கொமிஷன் (மைனொரொட்டி) என்ற ஆணைக்குழு இந்தியாவில் உள்ளது போல இங்கும் அமைக்கப்படுவது அதிகம் பிரயோஷனமானது.

அதேபோல செனட் சபை நாட்டில் எல்லா மக்களுக்கும் தீர்வை பலப்படுத்துவதாக இருக்கும்.இதனையடுத்து தேர்தல் முறையிலே எல்லை நிர்ணயம் சிக்கலான விவாதப்பொருளாக மாறியிருக்கின்றது. எல்லை நிர்ணயம் என்று வருகின்ற போது அதிலே உள்ளுராட்சி மன்றங்களின் எல்லைகள் தான் நிர்ணயம் செய்யப்பட்டிருக்கின்றன.அது அரச வர்த்தகமானியிலே பிரசுரிக்கப்டவிருக்கின்ற சூழலிலே இருக்கின்றோம்.

இந்நசந்தர்ப்பத்திலே சிறுபான்மை சமூகத்தினருடைய பிரதிநிதிகள்.அரசியல் கட்சிகள் மற்றும் சிறிய அரசியல் கட்சிகள் எல்லோரும் இணைந்து கோரிக்கையொன்றினை சொல்லி வருகின்றார்கள்.

இந்த வட்டாரப்பிரிப்பு. எல்லை நிர்ணயம் அதிக சர்ச்சைக்குறிய விடயமாக இருக்கின்றது.அதனால் நாங்கள் கனிஷமான அளவு நாங்கள் பாதிக்கப்ட்டிருக்கின்றோம். அதில் நியாயங்கள் காணப்படுகின்றது. ஆகவே தான் இந்த எல்லை நிர்ணயம் சரியாக செய்யப்படவேண்டும்.இல்லாவிட்டால் சட்டரீதியான தீர்வுகளை நோக்கி செல்ல வேண்டிவரும் எனவும் தெரிவித்தார்.

இந்நிகழ்வினை அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா சபையின் ஹொரவ்பொத்தானை கிளை.நவீன தொழிநுட்பக்கற்கைகள் நிறுவகம்.கல்விக்கான சக வாழ்வு மன்றம் மற்றும் சிறிலங்கா இஸ்லாமிய மாணவர் இயக்கம் போன்ற அமைப்புக்கள் ஏற்பாடு செய்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -