ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகரும் மறைந்த தலைவருமான மர்ஹும் அஷ்ரப் அவர்களுக்கும்தற்போதைய கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட்டுக்குமிடையில் இருந்த நெருக்கத்தைக்கணடு நாம் பொறாமைப்பட்டுள்ளோம்.
ஆனால் தாருஸ்ஸலாம் மறைக்கப்பட்ட உண்மைகள் எனும் புத்தகத்தில் முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட்அவர்களுக்கும் அஷ்ரப் அவர்களுக்கும் முரண்பாடு இருப்பதைப்போல காட்ட முற்பட்டு அவர்களேதோற்றுப் போயுள்ளனர்.
தாருஸ்ஸலாம் மறைக்கப்படாத உண்மைகள் என்னும் நூல் வௌியீட்டு விழா சாய்ந்தமருது லீ மெரிடியன்கூட்டமண்டபத்துல் இடம்பெற்ற போது அதில் உரையாற்றும் போதே எல்.அப்துல் ரசாக் இதனைக் கூறினார்.
மறைந்த தலைவர் அஷ்ரப் அவர்கள் 1994.09.25 ஆம் திகதி முதன் முதலில் அமைச்சராக பதவியேற்ற போதுஅவருடன் உம்ரா சென்ற நால்வருள் முதலமைச்சர் ஹாபிஸ் நசீரும் ஒருவர் ஏனையவர்கள் மர்ஹும் அஷ்ரப்பின்மகன் அமான்,புஹாரி மௌலவி மற்றும் மறைந்த தலைவர் அஷ்ரப் அவர்கள் ஆகியோர் ஆவார்கள்.
அது மட்டுட்டுமல்லாமல் மறைந்த தலைவர் அஷ்ரப் அவர்கள் 21.08.2000 ஆம் திகதி இறுதியாக உம்ரா சென்றபோதும் அவருடன் ஹாபிஸ் நசீர் மட்டுமே சென்றிருந்தார் என்ற உண்மையும் எல்லோருக்கும் தெரியும், இவற்றையெல்லாம் ஹாபிஸ் நசீர் தற்போது முதலமைச்சராக இருக்கும் காரணத்தால் நான் இதனைக்கூறவில்லை உண்மைகள் மறைக்கப்படக்கூடாது என்பதற்காகவே கூறுகின்றேன்,
ஒவ்வொரு உண்மைகளும் ஒவ்வொரு அமானிதங்கள் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும், தாருஸ்ஸலாம் மறைக்கப்பட்ட உண்மைகள் என்ற புத்தகத்தில் தாருஸ்ஸலாத்தைப் பெற்றுக் கொள்ள ஹாபிஸ்நசீர் கொடுத்த படிவத்தில் மறைந்த பெருந்தலைவர் கையெழுத்திட்டார் என்று கூறுகின்றார்கள்,அத்துடன் ஹாபிஸ்மீது அஷ்ரப்புக்கு நம்பிக்கையில்லை என்று கூறுகின்றார்கள்,நம்பிக்கையில்லாத ஒருவர் ஒரு ஆவணத்தைநீட்டியவுடன் பெருந்தலைவர் கணமும் சிந்தியாது கையெழுத்திட்டார் என்று கூறுகின்றார்கள்,யார் காதில் இவர்கள்பூச்சூடப் பார்க்கின்றார்கள்.
இவர்கள் புனைந்த பொய்களையெல்லாம் முளையிலேயே கிள்ளி எறிந்துள்ளோம் ,தாருஸ்ஸலாம் மறைக்கப்படாதஉண்மைகள் புத்தகத்தின் ஊடாக பல உண்மைகளை வௌிக் கொணர்ந்துருக்கின்றோம்.மேலும் ஒரு புத்தகத்தைவௌியிடப் போவதாக எமது முன்னாள் தவிசாளர் கூறியுள்ளார்,அவர் அதில் எவ்வாறான கேள்விகளை கேட்பார்என்பதை முன்கூட்டியே அறிந்து அதற்கான ஆதாரங்களையும் திரட்டியே வைத்துள்ளோம்,
தனிப்பட்ட அரசியல் காழ்ப்புணர்வுகளுக்கும்,பதவி மோகத்துக்கும் மறைந்த பெருந்தலைவர் மர்ஹும் அஷ்ரப்அவர்களின் ஆளுமைக்கு பாதிப்பை ஏற்படுத்து வகையில் இவ்வாறான பொய்களை புனைவதை வேதனையளிப்பதாய் அமைகின்றது, எது எவ்வாறாயினும் சதிகாரர்களுக்கு பயந்து உண்மைகளை ஒழித்து வைக்க நாம் தயாரில்லை,அவர்கள்பொய்களை எந்தளவில் கூறுகின்றார்களோ அதைவிட உரத்த குரலில் நாம் உண்மைகளை எடுத்துரைக்கதயாராகவுள்ளோம்.
தாறுஸ்ஸலாம் மறைக்கப்பட்ட மர்மங்கள் எனும் திருட்டுப் புத்தகம் ஒன்று வெளியிட்டு அதன் மூலம்தாருஸ்ஸலாம் பற்றியும் குறிப்பிட்ட சிலர் தொடர்பிலும் பொய்யான தகவல்கள் எழுதப்பட்டிருந்தன. ஆனால் அதற்குசரியான உண்மையான விபரங்களை முழுமையாக வழங்கப்படவேண்டும் என்ற விருப்பத்தில் முழுமையானஉண்மைகளை தாருஸ்ஸலாம் மறைக்கப்படாத உண்மைகள் என்னும் நூல் ஒன்றினை வெளியிட விரும்பி நானும்நண்பர் நவாஸ் செளபியும் இணைந்து இப்புத்தகத்தை எழுதி இன்று வெளியீட்டு விழாவையும் செய்திருக்கிறோம்.
அத்துடன் குறித்த திருட்டுப்புத்தகம் தலைவர் ரவூப் ஹக்கீம் அவர்களைப் பற்றி பொய்யான தகவல்கள்வழங்கியுள்ளதுடன் ஹாபிஸ் நசீரை நலினப்படுத்தவும், அவரை மக்கள் முன் பொய் வதந்திகளைப் பரப்பி அவரின்பெயரை மோசப்படுத்தவும் எண்ணிய நபரின் போலி முகத்தை இன்றய விழா வெளிச்சம் போட்டுக்காட்டும் என்றுநினைக்கிறேன்.
ஆனால் அந்த புத்தகத்தில் குறிப்பிடப்பட்ட விடயங்கள் நூறு வீதம் பொய்யான விடயங்களாகவேகாணப்பட்டன. என்பதனை அனைவரும் சரியாக புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவே இந்த பதில் புத்தகத்தை மக்கள் முன்கொண்டுவருகிறோம். கட்சியின் தலைமையகமான தாருஸ்ஸலாம் பற்றிய வரவு செலவுகள் மிகவும் தெளிவாகவும்அனைவரும் புரிந்து கொள்ளும் விதமாகவும் இந்த மறுப்புப் புத்தகத்தில் வெளியிடப்பட்டிருக்கிறது.
ஆனால் நமது கட்சியின் ஸ்தாகபத் தலைவர் மர்ஹூம் அஸ்ரப் அவர்களின் மிகவும் நம்பிக்கைக்குரிய ஒருவராக இருந்தவர் ஹாபிஸ் நஸீர் அஹமட் என்ற ஒரே நோக்கத்திற்காகவும் பதவிகளைஅடைந்து.